• Apr 27 2024

செட்டிநாடு சிக்கன் சூப்: இப்படி செய்து சாப்பிடுங்க!

Sharmi / Dec 17th 2022, 9:25 pm
image

Advertisement

பெரும்பாலானோர் ஆட்டுக்கால் சூப்பு தான் அதிகம் குடித்து இருப்பார்கள். கோழி சூப்பிலும் மருத்துவம் நிறைந்துள்ளது என்று யாரும் அறிந்திருக்க மாட்டார்கள். எனவே கோழியிலும் சூப் செய்து குடித்து பாருங்கள். உடலுக்கு மிகவும் நல்லது.

தேவையான பொருட்கள்

கோழி (எலும்புடன்) – ½ கிலோ
சின்ன வெங்காயம் – 10
சீரகத்தூள் – 1 தேக்கரண்டி
மிளகுத்தூள் – 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 1
தக்காளி – 1
இஞ்சி – 1 துண்டு
பூண்டு – 5 பல்
பட்டை, லவங்கம் – தலா 1
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
தனியாத்தூள் – 1 தேக்கரண்டி
மஞ்சத்தூள் – 1/2 தேக்கரண்டி
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை

இஞ்சி, பூண்டை விழுதாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை, லவங்கம் சேர்த்து தாளித்து, இரண்டாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

பின் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். பின்னர், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு மசியுமாறு வதக்கிக் கொள்ளவும்.

வதக்கிய கலவையை குக்கரில் போட்டு மிளகுத்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சத்தூள், உப்பு, கோழிக்கறி சேர்த்து நன்கு கலக்கி ஆறு விசில் வரும் வரை வேக விடவும். பின்பு சூப்பில் எலும்பிச்சை சாறு பிழிந்து பரிமாறவும். சுவையான செட்டிநாடு சிக்கன் சூப் ரெடி.


செட்டிநாடு சிக்கன் சூப்: இப்படி செய்து சாப்பிடுங்க பெரும்பாலானோர் ஆட்டுக்கால் சூப்பு தான் அதிகம் குடித்து இருப்பார்கள். கோழி சூப்பிலும் மருத்துவம் நிறைந்துள்ளது என்று யாரும் அறிந்திருக்க மாட்டார்கள். எனவே கோழியிலும் சூப் செய்து குடித்து பாருங்கள். உடலுக்கு மிகவும் நல்லது.தேவையான பொருட்கள்கோழி (எலும்புடன்) – ½ கிலோசின்ன வெங்காயம் – 10சீரகத்தூள் – 1 தேக்கரண்டிமிளகுத்தூள் – 1 தேக்கரண்டிபச்சை மிளகாய் – 1தக்காளி – 1இஞ்சி – 1 துண்டுபூண்டு – 5 பல்பட்டை, லவங்கம் – தலா 1மிளகாய் தூள் – 1 தேக்கரண்டிதனியாத்தூள் – 1 தேக்கரண்டிமஞ்சத்தூள் – 1/2 தேக்கரண்டிஎண்ணெய் – தேவையான அளவுஉப்பு – தேவையான அளவுசெய்முறைஇஞ்சி, பூண்டை விழுதாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை, லவங்கம் சேர்த்து தாளித்து, இரண்டாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.பின் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். பின்னர், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு மசியுமாறு வதக்கிக் கொள்ளவும்.வதக்கிய கலவையை குக்கரில் போட்டு மிளகுத்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சத்தூள், உப்பு, கோழிக்கறி சேர்த்து நன்கு கலக்கி ஆறு விசில் வரும் வரை வேக விடவும். பின்பு சூப்பில் எலும்பிச்சை சாறு பிழிந்து பரிமாறவும். சுவையான செட்டிநாடு சிக்கன் சூப் ரெடி.

Advertisement

Advertisement

Advertisement