• Apr 28 2024

பார்வையற்றோருக்கான டி20 உலகக் கோப்பை: சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா!

Tamil nila / Dec 17th 2022, 9:23 pm
image

Advertisement

இந்தியாவில், பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பார்வையற்றோருக்கான 3-வது இருபதுக்கு இருபது  உலகக் கோப்பை போட்டியில், சுனில் ரமேஷ் மற்றும் கேப்டன் அஜய் குமார் ரெட்டியின் சிறப்பான ஆட்டத்தால், இந்தியா வங்கதேசத்தை 120 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, தொடர்ந்து மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.


நாணய சுழற்சியை வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 2 விக்கெட் இழப்புக்கு 277 ஓட்டங்கள் எடுத்தது. சுனில் ரமேஷ் 136 ஓட்டங்களும், கேப்டன் அஜய் ரெட்டி 100 ஓட்டங்களும் எடுத்தனர்.


அதன் பிறகு ஆடிய வங்கதேச அணியால் 3 விக்கெட் இழப்புக்கு 157 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 120 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, பார்வையற்றோருக்கானஇருபதுக்கு இருபது  உலகக் கோப்பைப் போட்டியை 3-வது முறையாக வென்றுள்ளது.


இதற்கு முன்பு நடைபெற்ற 2012,2017 பார்வையற்றோருக்கான உலக கிண்ண  உலகக் கோப்பைப் போட்டிகளையும் இந்திய அணியே வென்றமை சிறப்பு அம்சமாகும்.

பார்வையற்றோருக்கான டி20 உலகக் கோப்பை: சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா இந்தியாவில், பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பார்வையற்றோருக்கான 3-வது இருபதுக்கு இருபது  உலகக் கோப்பை போட்டியில், சுனில் ரமேஷ் மற்றும் கேப்டன் அஜய் குமார் ரெட்டியின் சிறப்பான ஆட்டத்தால், இந்தியா வங்கதேசத்தை 120 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, தொடர்ந்து மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.நாணய சுழற்சியை வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 2 விக்கெட் இழப்புக்கு 277 ஓட்டங்கள் எடுத்தது. சுனில் ரமேஷ் 136 ஓட்டங்களும், கேப்டன் அஜய் ரெட்டி 100 ஓட்டங்களும் எடுத்தனர்.அதன் பிறகு ஆடிய வங்கதேச அணியால் 3 விக்கெட் இழப்புக்கு 157 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 120 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, பார்வையற்றோருக்கானஇருபதுக்கு இருபது  உலகக் கோப்பைப் போட்டியை 3-வது முறையாக வென்றுள்ளது.இதற்கு முன்பு நடைபெற்ற 2012,2017 பார்வையற்றோருக்கான உலக கிண்ண  உலகக் கோப்பைப் போட்டிகளையும் இந்திய அணியே வென்றமை சிறப்பு அம்சமாகும்.

Advertisement

Advertisement

Advertisement