• Nov 24 2024

வரிகள் தொடர்பில் சீனா- ஐரோப்பிய ஒன்றியம் இடையே பேச்சுவார்த்தை!

Tamil nila / Jun 23rd 2024, 6:56 pm
image

வரிகளின் தொடர்பில் அதிகரித்துவரும் பூசலுக்குத் தீர்வுகாணும் நோக்கில், சீனாவும் ஐரோப்பிய ஒன்றியமும் பேச்சுவார்த்தையை நடத்த ஒப்புக்கொண்டுள்ளன.

சீனாவிலிருந்து வரும் மின்சாரக் கார்களுக்கு வரிவிதிக்க ஐரோப்பிய ஒன்றியம் பரிந்துரைத்துள்ள திட்டம் குறித்து, சீன வர்த்தக அமைச்சர் வாங் வென்தாவும், ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தக ஆணையர் வால்டிஸ் டொம்புரொவ்ஸ்கிசும் கலந்துபேசுவார்கள் என்று சீன வர்த்தக அமைச்சு கூறியது.

முன்னதாக, ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொண்டுள்ளது என்று ஜெர்மனியின் துணை அதிபரும் பொருளாதார அமைச்சருமான ராபர்ட் ஹாபெக் கூறினார்.அதன் மூலம் வரிகள் தவிர்க்கப்படக்கூடும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

சீனாவிலிருந்து வரும் மின்சாரக் கார்களுக்கு 38 சதவீதம் வரை வரிவிதிக்க இந்த மாதம் ஐரோப்பிய ஒன்றியம் பரிந்துரைத்தது.தற்போது ஏற்கெனவே இறக்குமதி செய்யப்படும் கார்கள் மீது 10 சதவீத வரி விதிக்கப்படுகிறது.

சீனாவின் மின்சாரக் கார் துறை அரசாங்கத்திடமிருந்தும் அரசாங்கக் கட்டுப்பாட்டில் உள்ள வங்கி முறையிலிருந்தும் அதிக அளவில் சலுகை பெறுவதை அறிந்துள்ளதாக ஆணையம் கூறியது.சீனாவின் மின்சாரக் கார் ஏற்றுமதிகள், ஐரோப்பாவில் கார் தயாரிப்பு நிறுவனங்களுக்குச் சவாலாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

பெய்ஜிங்கில் நடைபெற்ற கூட்டங்களுக்குப் பிறகு, ஷாங்ஹாயில் திரு ஹாபெக் வரிகளைத் தற்காத்துப் பேசினார்.“இந்த வரிகள் தண்டனையல்ல,” என்று கூறிய அவர், அவை உலக வர்த்தக அமைப்பின் விதிமுறைகளை மீறும் சலுகைகளை ஈடுகட்ட விதிக்கப்படுவதாகச் சொன்னார்.

வரிகள் தொடர்பில் சீனா- ஐரோப்பிய ஒன்றியம் இடையே பேச்சுவார்த்தை வரிகளின் தொடர்பில் அதிகரித்துவரும் பூசலுக்குத் தீர்வுகாணும் நோக்கில், சீனாவும் ஐரோப்பிய ஒன்றியமும் பேச்சுவார்த்தையை நடத்த ஒப்புக்கொண்டுள்ளன.சீனாவிலிருந்து வரும் மின்சாரக் கார்களுக்கு வரிவிதிக்க ஐரோப்பிய ஒன்றியம் பரிந்துரைத்துள்ள திட்டம் குறித்து, சீன வர்த்தக அமைச்சர் வாங் வென்தாவும், ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தக ஆணையர் வால்டிஸ் டொம்புரொவ்ஸ்கிசும் கலந்துபேசுவார்கள் என்று சீன வர்த்தக அமைச்சு கூறியது.முன்னதாக, ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொண்டுள்ளது என்று ஜெர்மனியின் துணை அதிபரும் பொருளாதார அமைச்சருமான ராபர்ட் ஹாபெக் கூறினார்.அதன் மூலம் வரிகள் தவிர்க்கப்படக்கூடும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.சீனாவிலிருந்து வரும் மின்சாரக் கார்களுக்கு 38 சதவீதம் வரை வரிவிதிக்க இந்த மாதம் ஐரோப்பிய ஒன்றியம் பரிந்துரைத்தது.தற்போது ஏற்கெனவே இறக்குமதி செய்யப்படும் கார்கள் மீது 10 சதவீத வரி விதிக்கப்படுகிறது.சீனாவின் மின்சாரக் கார் துறை அரசாங்கத்திடமிருந்தும் அரசாங்கக் கட்டுப்பாட்டில் உள்ள வங்கி முறையிலிருந்தும் அதிக அளவில் சலுகை பெறுவதை அறிந்துள்ளதாக ஆணையம் கூறியது.சீனாவின் மின்சாரக் கார் ஏற்றுமதிகள், ஐரோப்பாவில் கார் தயாரிப்பு நிறுவனங்களுக்குச் சவாலாக இருப்பதாகக் கூறப்படுகிறது.பெய்ஜிங்கில் நடைபெற்ற கூட்டங்களுக்குப் பிறகு, ஷாங்ஹாயில் திரு ஹாபெக் வரிகளைத் தற்காத்துப் பேசினார்.“இந்த வரிகள் தண்டனையல்ல,” என்று கூறிய அவர், அவை உலக வர்த்தக அமைப்பின் விதிமுறைகளை மீறும் சலுகைகளை ஈடுகட்ட விதிக்கப்படுவதாகச் சொன்னார்.

Advertisement

Advertisement

Advertisement