• Mar 23 2023

முஸ்லிம், கிறிஸ்தவ கைதிகளை சித்திரவதை செய்து உடல் உறுப்புகளை பிரித்து விற்பனை செய்யும் சீனா! வெளியான அதிர்ச்சி அறிக்கை

Chithra / Jan 30th 2023, 9:00 pm
image

Advertisement

சீனாவில் சீன கம்யூனிஸ்டு கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. அந்நாட்டில் பலூன் கேங், உய்குர், திபெத்திய மற்றும் கிறிஸ்தவர்களில் பலர் சிறை கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டு உள்ளனர். 

அவர்களிடம் இருந்து உடல் உறுப்புகள் திருடப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு சர்வதேச அளவில் எதிரொலித்து உள்ளது.

இதுபற்றி ஏகாதிபத்தியத்திற்கு எதிரான குரல் என்ற பெயரிலான அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது. அதில, பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்து உள்ளன.

இதுபற்றி, சீனாவில் மனித உறுப்புகள் கட்டாய அறுவடை என்ற தலைப்பில் சர்வதேச அளவிலான கருத்தரங்கம் ஒன்றில் பேசிய நிபுணர்கள் உலக சமூகத்திற்கு எச்சரிக்கை விடுத்து உள்ளனர். 

சட்டவிரோத வகையில் பிடித்து, அடைக்கப்பட்டு உள்ள கைதிகளிடம் இருந்து உறுப்புகள் திருடப்பட்டு அவை விற்பனை செய்யப்படுகின்றன.

இவற்றுக்கு, உலகம் முழுவதும் உள்ள மருத்துவர்கள், அரசாங்கங்கள் மற்றும் உலக சுகாதார அமைப்பு போன்ற சர்வதேச அமைப்புகள், இந்த மனித தன்மையற்ற மற்றும் சர்ச்சைக்குரிய நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்து உள்ளனர் என அறிக்கை தெரிவிக்கின்றது.

கைதிகளிடம் இருந்து தொடங்கிய இந்த திருட்டு விற்பனை தற்போது வர்த்தக போட்டி கொண்ட தொழிலாக வளர்ந்து உள்ளது.

இதன்படி, சீன மருத்துவ மையங்கள் மற்றும் சீன அதிகாரிகளின் பேராசை ஆகியவற்றால், தற்போது சீனாவின் ஏழை குடும்பத்து டீன்-ஏஜ் சிறுவர், சிறுமிகளை கடத்துவது அதிகரித்து உள்ளது.


அதன்பின் அவர்களை கொலை செய்து, உறுப்புகளை திருடுகின்றனர் என அறிக்கை அதிர்ச்சி தகவலை தெரிவிக்கின்றது.

அந்த கூட்டத்தில், டாக்டர் என்வர் தோட்டி புக்தா, ஜெனிபர் ஜெங் மற்றும் ஈத்தன் கட்மேன் உள்ளிட்ட நிபுணர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இதில் குறிப்பிடத்தக்க விசயங்களில் ஒன்றாக, பிற நாடுகளில் எல்லாம் இதயம், சிறுநீரகம், நுரையீரல் அல்லது கணையம் போன்ற பிற உறுப்புகளை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக பெறுவதற்கு என மாத கணக்கில் அல்லது வருட கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

பெரிய தொகையையும் செலவிட வேண்டும். ஆனால், சீனாவிலோ, குறுகிய காலத்தில், குறைந்த விலையில் நோயாளிகள் உறுப்புகளை பெற்று விடுகின்றனர் என்பது அந்த நிபுணர்களுக்கு ஆச்சரியம் ஏற்படுத்தி உள்ளது என அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.

1980-ம் ஆண்டு வரை, புதிதாக சிறைக்கு வரும் கைதிகளிடம் ஒப்புதலுடன் உறுப்புகள் பெறும் நடைமுறை இருந்து வந்தது.

ஆனால், சீனாவில் தியானம், யோகா போன்ற உடல் பயிற்சி செய்து, புகை பிடித்தல், மது பழக்கம் இன்றி எளிய மற்றும் சுகாதார வாழ்க்கை வாழ்ந்து வந்தவர்களாக பலூன் கேங் என்ற அமைப்பை சேர்ந்த உறுப்பினர்கள் இருந்தனர்.

இவர்களை சீன அதிபரான ஜியாங் ஜெமின் என்பவர் சிறை பிடித்த உத்தரவிட்டார். இதுபோன்று 20 லட்சம் பேர் கைதிகளானார்கள். அவர்களில் ஒருவரே ஜெனிபர் ஜெங் என்ற முன்னர் குறிப்பிட்ட அந்த நிபுணர் ஆவார்.


அமெரிக்காவில் தற்போது பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளராக உள்ள அவர், இந்த பலூன் கேங் முகாமில் சிறை வைக்கப்பட்டு இருந்த ஓராண்டு நினைவலைகளை பகிர்ந்து கொண்டார்.

இதன்படி, 20 லட்சம் பலூன் கேங் கைதிகளின் மருத்துவ வரலாறு மற்றும் ரத்த மாதிரி வகைகள் பரிசோதிக்கப்பட்டு உள்ளன. அதன்பின் உறுப்பு மாற்று சிகிச்சை வசதிக்கான மருத்துவமனைகளின் பயன்பாடு பற்றிய தேசிய அளவிலான தகவல் தயாரிக்கப்பட்டது என அவர் கூறுகிறார்.

தொடர்ந்து அந்த அறிக்கையில், சிச்சுவான் மாகாணத்தில் உள்ள தாயார் ஒருவர் கூறும்போது, தனது டீன்-ஏஜ் மகனை குப்பை போட சொல்லி அனுப்பி வைத்தேன். பல நாட்களாகியும் அவன் திரும்பி வரவில்லை.

அதன்பின் வீட்டில் இருந்து சில கி.மீ. தொலைவில் அவனது உடல் கிடந்தது. அதில், பல முக்கிய உறுப்புகளை காணவில்லை என வேதனை தெரிவித்து உள்ளார்.

சீனாவில் மனித உறுப்புகள் எப்படி கிடைக்கின்றன என்பது பற்றிய தகவல்களை வெளியிடாமல் அவற்றை அரசு தவிர்த்து வருகிறது என குற்றச்சாட்டாக கூறப்படுகிறது.

சீனாவில் உய்குர் முஸ்லிம்களை சிறைபிடித்து வைத்திருக்கும் முகாம்களை பற்றிய செயற்கைக்கோள் புகைப்படங்களை, நிபுணர்களில் ஒருவரான கட்மேன் என்பவர் வெளியிட்டு உள்ளார்.

அதில், அந்த முகாம் ஒவ்வொன்றின் அருகே புதிதாக 9 தகன மேடைகள் அமைக்கப்பட்டு இருந்தன. சீன அதிகாரிகள் அமைத்த அவற்றை சுற்றி, ஒவ்வொன்றிலும் தலா 50 சீன படையினர் காவல் காத்து வருகின்றனர் என கட்மேன் தெரிவித்து உள்ளார்.

முஸ்லிம்கள் இறந்த பின்னர் உடல்களை புதைக்கும் வழக்கம் கொண்டவர்கள். பின்பு ஏன் இந்த தகன மேடைகள்? என்ற கேள்வி எழாமல் இல்லை. 

ஏனெனில், படுகொலை பற்றிய எந்த தடயமும் இல்லாமல் உறுப்புகளை பிரித்து எடுத்த பின்னர், உடல்களை எரித்து விடுவார்கள் என்பதே இதன் வழியே தெரிய வருகிறது என கட்மேன் அதிர்ச்சி தெரிவித்து உள்ளார்.

ஏகாதிபத்தியத்திற்கு எதிரான குரல் என்ற அந்த அறிக்கையில், கட்மேன் கூறும்போது, 2002-ம் ஆண்டு வரை ஒரு பொது நடைமுறை காணப்பட்டது.

அதன்படி, ஜெர்மனி போன்ற பணக்கார நாடுகளை சேர்ந்த நோயாளிகள் ஷாங்காய் நகருக்கு விமானத்தில் பறந்து சென்று, 4 மணிநேரத்தில் புதிதாக கல்லீரல் பெற்று விடுவார்கள்.

அவர்களது ரத்த மாதிரியும் சரியாக இருக்கும். இதற்கு அர்த்தம் என்னவெனில், கைதிகளாக அடைப்பட்டிருக்கும் முகாம்களில் உள்ள நபர்களிடம் இருந்து, தகவல் தொகுப்பில் பெறப்பட்ட தரவுகளை கொண்டு ரத்த மாதிரி அடையாளம் காணப்பட்டு பின்னர் அவர் குறிப்பிட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவார். அதன்பின் உறுப்பு அறுவடை நடக்கும் என ஈத்தன் கூறுகிறார்.

டாக்டர் என்வர் தோட்டி கூறும்போது, சில நோயாளிகளின் உறுப்புகளை பிரித்து எடுத்து, அவற்றை வேறு நோயாளிகளின் பயன்பாட்டுக்காக அளிப்பது நல்ல விசயம் என நினைத்தேன்.

ஆனால், பிரிட்டனுக்கு சென்ற பின்னரே, அது மனித இனத்திற்கு எதிரான குற்றம் என அறிந்தேன் என கூறுகிறார். இதுபோன்ற பல அதிர்ச்சி தரும் விசயங்கள் கருத்தரங்கில் பேசப்பட்டு உள்ளன என அந்த அறிக்கை தெரிவிக்கின்றது. 

சீன அரசால் இதுபோன்ற செயல்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன என்றும் உலக நாடுகளால் அவை கவனிக்கப்படாமல் உள்ளன என்றும் அறிக்கை அதிர்ச்சி தெரிவிக்கின்றது.

முஸ்லிம், கிறிஸ்தவ கைதிகளை சித்திரவதை செய்து உடல் உறுப்புகளை பிரித்து விற்பனை செய்யும் சீனா வெளியான அதிர்ச்சி அறிக்கை சீனாவில் சீன கம்யூனிஸ்டு கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. அந்நாட்டில் பலூன் கேங், உய்குர், திபெத்திய மற்றும் கிறிஸ்தவர்களில் பலர் சிறை கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து உடல் உறுப்புகள் திருடப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு சர்வதேச அளவில் எதிரொலித்து உள்ளது.இதுபற்றி ஏகாதிபத்தியத்திற்கு எதிரான குரல் என்ற பெயரிலான அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது. அதில, பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்து உள்ளன.இதுபற்றி, சீனாவில் மனித உறுப்புகள் கட்டாய அறுவடை என்ற தலைப்பில் சர்வதேச அளவிலான கருத்தரங்கம் ஒன்றில் பேசிய நிபுணர்கள் உலக சமூகத்திற்கு எச்சரிக்கை விடுத்து உள்ளனர். சட்டவிரோத வகையில் பிடித்து, அடைக்கப்பட்டு உள்ள கைதிகளிடம் இருந்து உறுப்புகள் திருடப்பட்டு அவை விற்பனை செய்யப்படுகின்றன.இவற்றுக்கு, உலகம் முழுவதும் உள்ள மருத்துவர்கள், அரசாங்கங்கள் மற்றும் உலக சுகாதார அமைப்பு போன்ற சர்வதேச அமைப்புகள், இந்த மனித தன்மையற்ற மற்றும் சர்ச்சைக்குரிய நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்து உள்ளனர் என அறிக்கை தெரிவிக்கின்றது.கைதிகளிடம் இருந்து தொடங்கிய இந்த திருட்டு விற்பனை தற்போது வர்த்தக போட்டி கொண்ட தொழிலாக வளர்ந்து உள்ளது.இதன்படி, சீன மருத்துவ மையங்கள் மற்றும் சீன அதிகாரிகளின் பேராசை ஆகியவற்றால், தற்போது சீனாவின் ஏழை குடும்பத்து டீன்-ஏஜ் சிறுவர், சிறுமிகளை கடத்துவது அதிகரித்து உள்ளது.அதன்பின் அவர்களை கொலை செய்து, உறுப்புகளை திருடுகின்றனர் என அறிக்கை அதிர்ச்சி தகவலை தெரிவிக்கின்றது.அந்த கூட்டத்தில், டாக்டர் என்வர் தோட்டி புக்தா, ஜெனிபர் ஜெங் மற்றும் ஈத்தன் கட்மேன் உள்ளிட்ட நிபுணர்கள் கலந்து கொண்டுள்ளனர்.இதில் குறிப்பிடத்தக்க விசயங்களில் ஒன்றாக, பிற நாடுகளில் எல்லாம் இதயம், சிறுநீரகம், நுரையீரல் அல்லது கணையம் போன்ற பிற உறுப்புகளை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக பெறுவதற்கு என மாத கணக்கில் அல்லது வருட கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.பெரிய தொகையையும் செலவிட வேண்டும். ஆனால், சீனாவிலோ, குறுகிய காலத்தில், குறைந்த விலையில் நோயாளிகள் உறுப்புகளை பெற்று விடுகின்றனர் என்பது அந்த நிபுணர்களுக்கு ஆச்சரியம் ஏற்படுத்தி உள்ளது என அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.1980-ம் ஆண்டு வரை, புதிதாக சிறைக்கு வரும் கைதிகளிடம் ஒப்புதலுடன் உறுப்புகள் பெறும் நடைமுறை இருந்து வந்தது.ஆனால், சீனாவில் தியானம், யோகா போன்ற உடல் பயிற்சி செய்து, புகை பிடித்தல், மது பழக்கம் இன்றி எளிய மற்றும் சுகாதார வாழ்க்கை வாழ்ந்து வந்தவர்களாக பலூன் கேங் என்ற அமைப்பை சேர்ந்த உறுப்பினர்கள் இருந்தனர்.இவர்களை சீன அதிபரான ஜியாங் ஜெமின் என்பவர் சிறை பிடித்த உத்தரவிட்டார். இதுபோன்று 20 லட்சம் பேர் கைதிகளானார்கள். அவர்களில் ஒருவரே ஜெனிபர் ஜெங் என்ற முன்னர் குறிப்பிட்ட அந்த நிபுணர் ஆவார்.அமெரிக்காவில் தற்போது பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளராக உள்ள அவர், இந்த பலூன் கேங் முகாமில் சிறை வைக்கப்பட்டு இருந்த ஓராண்டு நினைவலைகளை பகிர்ந்து கொண்டார்.இதன்படி, 20 லட்சம் பலூன் கேங் கைதிகளின் மருத்துவ வரலாறு மற்றும் ரத்த மாதிரி வகைகள் பரிசோதிக்கப்பட்டு உள்ளன. அதன்பின் உறுப்பு மாற்று சிகிச்சை வசதிக்கான மருத்துவமனைகளின் பயன்பாடு பற்றிய தேசிய அளவிலான தகவல் தயாரிக்கப்பட்டது என அவர் கூறுகிறார்.தொடர்ந்து அந்த அறிக்கையில், சிச்சுவான் மாகாணத்தில் உள்ள தாயார் ஒருவர் கூறும்போது, தனது டீன்-ஏஜ் மகனை குப்பை போட சொல்லி அனுப்பி வைத்தேன். பல நாட்களாகியும் அவன் திரும்பி வரவில்லை.அதன்பின் வீட்டில் இருந்து சில கி.மீ. தொலைவில் அவனது உடல் கிடந்தது. அதில், பல முக்கிய உறுப்புகளை காணவில்லை என வேதனை தெரிவித்து உள்ளார்.சீனாவில் மனித உறுப்புகள் எப்படி கிடைக்கின்றன என்பது பற்றிய தகவல்களை வெளியிடாமல் அவற்றை அரசு தவிர்த்து வருகிறது என குற்றச்சாட்டாக கூறப்படுகிறது.சீனாவில் உய்குர் முஸ்லிம்களை சிறைபிடித்து வைத்திருக்கும் முகாம்களை பற்றிய செயற்கைக்கோள் புகைப்படங்களை, நிபுணர்களில் ஒருவரான கட்மேன் என்பவர் வெளியிட்டு உள்ளார்.அதில், அந்த முகாம் ஒவ்வொன்றின் அருகே புதிதாக 9 தகன மேடைகள் அமைக்கப்பட்டு இருந்தன. சீன அதிகாரிகள் அமைத்த அவற்றை சுற்றி, ஒவ்வொன்றிலும் தலா 50 சீன படையினர் காவல் காத்து வருகின்றனர் என கட்மேன் தெரிவித்து உள்ளார்.முஸ்லிம்கள் இறந்த பின்னர் உடல்களை புதைக்கும் வழக்கம் கொண்டவர்கள். பின்பு ஏன் இந்த தகன மேடைகள் என்ற கேள்வி எழாமல் இல்லை. ஏனெனில், படுகொலை பற்றிய எந்த தடயமும் இல்லாமல் உறுப்புகளை பிரித்து எடுத்த பின்னர், உடல்களை எரித்து விடுவார்கள் என்பதே இதன் வழியே தெரிய வருகிறது என கட்மேன் அதிர்ச்சி தெரிவித்து உள்ளார்.ஏகாதிபத்தியத்திற்கு எதிரான குரல் என்ற அந்த அறிக்கையில், கட்மேன் கூறும்போது, 2002-ம் ஆண்டு வரை ஒரு பொது நடைமுறை காணப்பட்டது.அதன்படி, ஜெர்மனி போன்ற பணக்கார நாடுகளை சேர்ந்த நோயாளிகள் ஷாங்காய் நகருக்கு விமானத்தில் பறந்து சென்று, 4 மணிநேரத்தில் புதிதாக கல்லீரல் பெற்று விடுவார்கள்.அவர்களது ரத்த மாதிரியும் சரியாக இருக்கும். இதற்கு அர்த்தம் என்னவெனில், கைதிகளாக அடைப்பட்டிருக்கும் முகாம்களில் உள்ள நபர்களிடம் இருந்து, தகவல் தொகுப்பில் பெறப்பட்ட தரவுகளை கொண்டு ரத்த மாதிரி அடையாளம் காணப்பட்டு பின்னர் அவர் குறிப்பிட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவார். அதன்பின் உறுப்பு அறுவடை நடக்கும் என ஈத்தன் கூறுகிறார்.டாக்டர் என்வர் தோட்டி கூறும்போது, சில நோயாளிகளின் உறுப்புகளை பிரித்து எடுத்து, அவற்றை வேறு நோயாளிகளின் பயன்பாட்டுக்காக அளிப்பது நல்ல விசயம் என நினைத்தேன்.ஆனால், பிரிட்டனுக்கு சென்ற பின்னரே, அது மனித இனத்திற்கு எதிரான குற்றம் என அறிந்தேன் என கூறுகிறார். இதுபோன்ற பல அதிர்ச்சி தரும் விசயங்கள் கருத்தரங்கில் பேசப்பட்டு உள்ளன என அந்த அறிக்கை தெரிவிக்கின்றது. சீன அரசால் இதுபோன்ற செயல்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன என்றும் உலக நாடுகளால் அவை கவனிக்கப்படாமல் உள்ளன என்றும் அறிக்கை அதிர்ச்சி தெரிவிக்கின்றது.

Advertisement

Advertisement

Advertisement