சுன்னாகம் பொலிஸ் நிலையத்தின் புதிய அலுவலகமானது இன்றையதினம் இலங்கை பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
ஆரம்பத்தில் பொலிசாரின் அணிவகுப்பு இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து சர்வமத தலைவர்களின் பிரார்த்தனைகள் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து புதிய பொலிஸ் நிலையமானது நாடா வெட்டி திறந்து வைக்கப்பட்ட பின்னர் மங்கல விளக்கேற்றல் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து இலங்கையின் பதில் பொலிஸ்மா அதிபர் உரையாற்றினார்.
சுன்னாகம் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி புரொடௌஸ் தலைமையில் நடைபெற்ற இந்த திறப்பு விழாவில், பிரதம அதிதியாக இலங்கையின் பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன், வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் திரு.தனபால, யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் காலிங்க ஜயசிங்க, யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லூசான் சூரிய பண்டார, பொலிஸ் உயர் அதிகாரிகள், சுன்னாகம் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
சுன்னாகம் பொலிஸ் நிலைய புதிய அலுவலகம் திறந்து வைப்பு சுன்னாகம் பொலிஸ் நிலையத்தின் புதிய அலுவலகமானது இன்றையதினம் இலங்கை பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.ஆரம்பத்தில் பொலிசாரின் அணிவகுப்பு இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து சர்வமத தலைவர்களின் பிரார்த்தனைகள் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து புதிய பொலிஸ் நிலையமானது நாடா வெட்டி திறந்து வைக்கப்பட்ட பின்னர் மங்கல விளக்கேற்றல் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து இலங்கையின் பதில் பொலிஸ்மா அதிபர் உரையாற்றினார்.சுன்னாகம் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி புரொடௌஸ் தலைமையில் நடைபெற்ற இந்த திறப்பு விழாவில், பிரதம அதிதியாக இலங்கையின் பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன், வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் திரு.தனபால, யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் காலிங்க ஜயசிங்க, யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லூசான் சூரிய பண்டார, பொலிஸ் உயர் அதிகாரிகள், சுன்னாகம் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.