• Nov 13 2024

வடக்கு மாகாணத்தில் கடமை புரிந்த காலத்தை பொன்னான காலமாக பார்க்கிறேன் - பதில் பொலிஸ் மா அதிபர் தெரிவிப்பு!

Tamil nila / Nov 9th 2024, 8:25 pm
image

நான் 9 மாதகாலம் வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபராக கடமை புரிந்தேன். அந்த காலத்தை ஒரு பொன்னான காலமாக நான் நினைவில் கொள்கின்றேன். அந்தவகையில் எனக்கு கீழ் இருக்கின்ற பொலிஸ் அதிகாரிகளை பயன்படுத்தி மிக சிறப்பான சேவையை நான் செய்வேன் என நம்புகின்றேன் என இலங்கையின் பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார்.

சுன்னாகம் பொலிஸ் நிலையத்தை இன்றையதினம் திறந்து வைத்த பின்னர் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். 

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாங்கள் தவறான காரியங்களில் ஈடுபட்டால் அது சம்பந்தமாகவும், நற்காரியங்கள் செய்தால் அதற்கான பிரதிபலிப்புகள் கிடைப்பது இந்த சமூகத்தில் இருந்தே. 

இப்போது இருக்கின்ற அரசினால், சட்டத்தை சரியாக அமுல்படுத்த வேண்டும் என எனக்கு அறிவிக்கப்பட்டிருக்கின்றது. எனக்கு கீழ் இயங்குகின்ற அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் நான் அது குறித்து அறிவித்திருக்கின்றேன். 

அதற்கு ஒரு நல்ல உதாரணம் தான் கடந்த காலத்தில் நடைபெற்ற தேர்தலுக்குப் பின்னர் அசம்பாவித நடவடிக்கைகள் இடம்பெற்றிருக்கவுமில்லை, அதற்கு எதிராக செயல்பட வேண்டிய தேவை எமக்கு ஏற்பட்டிருக்கவில்லை என்பது நல்ல ஒரு உதாரணமாகும்.

எமது காலப்பகுதியில் மிகவும் சீர்கெட்ட ஒரு தேர்தல் யாழ்ப்பாணம் மாவட்ட பகுதியில் நடந்த வரலாறு இருக்கிறது எமக்கு தெரியும். அப்படியில்லாமல் இந்த தடவை நடைபெற்ற தேர்தல் மிகவும் சமாதானமாக நடைபெறுவதற்கு நாங்கள் அனைவரும் ஒத்துழைத்தோம். 

தேர்தலுக்குப் பின்னர் இடம்பெறும் அசம்பாவிதங்கள் குறித்தான காலப்பகுதியை தேர்தலுக்குப் பின்னரான அசம்பாவித காலப்பகுதி என நாங்கள் குறிப்பிடுவோம். வெற்றி பெற்றவர்கள் தோல்வி அடைந்தவர்களை அடித்து துன்புறுத்துவது, எதிராக செயல்படுவது போன்ற செயற்பாடுகள் கடந்த காலப்பகுதிகளில் நிறைவேறியது.

அசம்பாவித காலப் பகுதியில் பொலிசாரை போன்று வேதனைக்குட்பட்ட உத்தியோகத்தர்களை நாங்கள் இனம் காண முடியாது. எனினும் கடந்த ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர் அப்படி ஒரு சம்பவம் இடம்பெறவில்லை. புதிய ஒரு கலாச்சாரம் இலங்கை தேசத்தில் உருவாகியுள்ளது.

சட்டத்தை சரியாக நடைமுறைப்படுத்தவில்லை என்றால் அது எமது இயலாமை அல்லது தவறு என்று தான் கூறலாம். சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இருக்கின்ற திணைக்களத்தில் உள்ளவர்கள் விடுகின்ற பிழைகள் என அவற்றை கூறலாம். எந்த ஒரு எதிர்ப்புகளும் இல்லாமல் சட்டத்தை நிறைவேற்றக்கூடிய ஒரு சூழல் இப்போது எங்களுக்கு இருக்கின்றது - என்றார்.


வடக்கு மாகாணத்தில் கடமை புரிந்த காலத்தை பொன்னான காலமாக பார்க்கிறேன் - பதில் பொலிஸ் மா அதிபர் தெரிவிப்பு நான் 9 மாதகாலம் வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபராக கடமை புரிந்தேன். அந்த காலத்தை ஒரு பொன்னான காலமாக நான் நினைவில் கொள்கின்றேன். அந்தவகையில் எனக்கு கீழ் இருக்கின்ற பொலிஸ் அதிகாரிகளை பயன்படுத்தி மிக சிறப்பான சேவையை நான் செய்வேன் என நம்புகின்றேன் என இலங்கையின் பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார்.சுன்னாகம் பொலிஸ் நிலையத்தை இன்றையதினம் திறந்து வைத்த பின்னர் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,நாங்கள் தவறான காரியங்களில் ஈடுபட்டால் அது சம்பந்தமாகவும், நற்காரியங்கள் செய்தால் அதற்கான பிரதிபலிப்புகள் கிடைப்பது இந்த சமூகத்தில் இருந்தே. இப்போது இருக்கின்ற அரசினால், சட்டத்தை சரியாக அமுல்படுத்த வேண்டும் என எனக்கு அறிவிக்கப்பட்டிருக்கின்றது. எனக்கு கீழ் இயங்குகின்ற அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் நான் அது குறித்து அறிவித்திருக்கின்றேன். அதற்கு ஒரு நல்ல உதாரணம் தான் கடந்த காலத்தில் நடைபெற்ற தேர்தலுக்குப் பின்னர் அசம்பாவித நடவடிக்கைகள் இடம்பெற்றிருக்கவுமில்லை, அதற்கு எதிராக செயல்பட வேண்டிய தேவை எமக்கு ஏற்பட்டிருக்கவில்லை என்பது நல்ல ஒரு உதாரணமாகும்.எமது காலப்பகுதியில் மிகவும் சீர்கெட்ட ஒரு தேர்தல் யாழ்ப்பாணம் மாவட்ட பகுதியில் நடந்த வரலாறு இருக்கிறது எமக்கு தெரியும். அப்படியில்லாமல் இந்த தடவை நடைபெற்ற தேர்தல் மிகவும் சமாதானமாக நடைபெறுவதற்கு நாங்கள் அனைவரும் ஒத்துழைத்தோம். தேர்தலுக்குப் பின்னர் இடம்பெறும் அசம்பாவிதங்கள் குறித்தான காலப்பகுதியை தேர்தலுக்குப் பின்னரான அசம்பாவித காலப்பகுதி என நாங்கள் குறிப்பிடுவோம். வெற்றி பெற்றவர்கள் தோல்வி அடைந்தவர்களை அடித்து துன்புறுத்துவது, எதிராக செயல்படுவது போன்ற செயற்பாடுகள் கடந்த காலப்பகுதிகளில் நிறைவேறியது.அசம்பாவித காலப் பகுதியில் பொலிசாரை போன்று வேதனைக்குட்பட்ட உத்தியோகத்தர்களை நாங்கள் இனம் காண முடியாது. எனினும் கடந்த ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர் அப்படி ஒரு சம்பவம் இடம்பெறவில்லை. புதிய ஒரு கலாச்சாரம் இலங்கை தேசத்தில் உருவாகியுள்ளது.சட்டத்தை சரியாக நடைமுறைப்படுத்தவில்லை என்றால் அது எமது இயலாமை அல்லது தவறு என்று தான் கூறலாம். சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இருக்கின்ற திணைக்களத்தில் உள்ளவர்கள் விடுகின்ற பிழைகள் என அவற்றை கூறலாம். எந்த ஒரு எதிர்ப்புகளும் இல்லாமல் சட்டத்தை நிறைவேற்றக்கூடிய ஒரு சூழல் இப்போது எங்களுக்கு இருக்கின்றது - என்றார்.

Advertisement

Advertisement

Advertisement