கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் திண்மக் கழிவுகளை பூரணமாக அகற்றுதல் மற்றும் கடற்கரை பிரதேசத்தை சுத்தம் செய்யும் வேலைத்திட்டம் கல்முனை மாநகர சபை ஆணையாளர் ஏ.ரீ.எம். றாபி தலைமையில் இன்றையதினம்(01) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இவ்வேலைத்திட்டம் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவாவின் பங்குபற்றலுடன் ஆரம்பமானது.
இதன் முதல் கட்டமாக சாய்ந்தமருதில் இவ்வேலைத்திட்டம் இன்று(01) சனிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டு திண்மக் கழிவுகளை பூரணமாக அகற்றப்பட்டதுடன் கடற்கரை பிரதேசமும் சுத்தம் செய்யப்பட்டன.
இவ்வேலைத்திட்டத்தினை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கிய பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவா, உதவி ஆணையாளர் ஏ.எம்.அஸீம், பொறியியலாளர் ஏ.ஜே.எம்.ஜெளசி உள்ளிட்ட மாநகர சபையின் சகல உத்தியோகத்தர்களுக்கும், பொதுமக்களுக்கும், மாநகர ஆணையாளர் ஏ.ரீ.எம். றாபி இதன் போது நன்றிகளை தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து கல்முனை மாநகர சபைக்குட்பட்ட ஏனைய பிரதேசங்களி லும் இவ்வேலைத்திட்டம் தொடராக முன்னெடுக்கப்படும் எனவும் மாநகர ஆணையாளர் ஏ.ரீ.எம். றாபி மேலும் தெரிவித்தார்.
கல்முனை மாநகர சபையினால் 'கிளீன் ஸ்ரீலங்கா' வேலைத்திட்டம் முன்னெடுப்பு. கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் திண்மக் கழிவுகளை பூரணமாக அகற்றுதல் மற்றும் கடற்கரை பிரதேசத்தை சுத்தம் செய்யும் வேலைத்திட்டம் கல்முனை மாநகர சபை ஆணையாளர் ஏ.ரீ.எம். றாபி தலைமையில் இன்றையதினம்(01) ஆரம்பித்து வைக்கப்பட்டது.இவ்வேலைத்திட்டம் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவாவின் பங்குபற்றலுடன் ஆரம்பமானது.இதன் முதல் கட்டமாக சாய்ந்தமருதில் இவ்வேலைத்திட்டம் இன்று(01) சனிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டு திண்மக் கழிவுகளை பூரணமாக அகற்றப்பட்டதுடன் கடற்கரை பிரதேசமும் சுத்தம் செய்யப்பட்டன.இவ்வேலைத்திட்டத்தினை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கிய பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவா, உதவி ஆணையாளர் ஏ.எம்.அஸீம், பொறியியலாளர் ஏ.ஜே.எம்.ஜெளசி உள்ளிட்ட மாநகர சபையின் சகல உத்தியோகத்தர்களுக்கும், பொதுமக்களுக்கும், மாநகர ஆணையாளர் ஏ.ரீ.எம். றாபி இதன் போது நன்றிகளை தெரிவித்தார்.இதனைத் தொடர்ந்து கல்முனை மாநகர சபைக்குட்பட்ட ஏனைய பிரதேசங்களி லும் இவ்வேலைத்திட்டம் தொடராக முன்னெடுக்கப்படும் எனவும் மாநகர ஆணையாளர் ஏ.ரீ.எம். றாபி மேலும் தெரிவித்தார்.