• Jan 16 2025

புதுக்குடியிருப்பு திம்பிலியில் மக்களால் பாவனையற்றிருந்த நெல் களஞ்சியசாலை துப்பரவு பணி

Tharmini / Jan 12th 2025, 2:00 pm
image

ஒரு செழிப்பான தேசம் ஒரு அழகான வாழ்க்கை" என்ற ஜனாதிபதியின் எண்ணக்கருவுக்கு அமைய ‘தூய்மையான இலங்கை’ (Clean Sri Lanka) எனும் திட்டமானது புதுக்குடியிருப்பு திம்பிலி பகுதியில் இன்று (12) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு, திம்பிலியில் நெல் களஞ்சிய சாலையானது கொரோனா காலப்பகுதிக்கு பின்னர் நெல் கொள்வனவு செய்யப்படாமையால் பல வருடங்களாக பாவனையற்று காணப்பட்டிருந்தது.

இதனால்  பல சமூக சீர்கேடுகள், சட்ட விரோத செயற்பாடுகளும் குறித்த இடத்தில் இடம்பெறுவதனால்  குறித்த இடம் தெரிவு செய்யப்பட்டு தூய்மையான இலங்கை’ (Clean Sri Lanka) எனும் செயற்திட்டதின் கீழ் 

பொதுமக்களால் இன்று (12)  துப்பரவு செய்யப்பட்டிருந்தது.  

குறித்த இடத்தில் பொதுமக்களிடையே கலாசார உணர்வை மேம்படுத்தும் வகையில் முதற்கட்டமாக எதிர்வரும் தைப்பொங்கல் தினத்தன்று மாபெரும் பொங்கல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

தேசிய மக்கள் சக்தியின்  ஆதரவாளர்கள், கிராம மக்கள் இணைந்து குறித்த பணியினை மேற்கொண்டிருந்தார்கள்.





புதுக்குடியிருப்பு திம்பிலியில் மக்களால் பாவனையற்றிருந்த நெல் களஞ்சியசாலை துப்பரவு பணி ஒரு செழிப்பான தேசம் ஒரு அழகான வாழ்க்கை" என்ற ஜனாதிபதியின் எண்ணக்கருவுக்கு அமைய ‘தூய்மையான இலங்கை’ (Clean Sri Lanka) எனும் திட்டமானது புதுக்குடியிருப்பு திம்பிலி பகுதியில் இன்று (12) ஆரம்பித்து வைக்கப்பட்டது.முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு, திம்பிலியில் நெல் களஞ்சிய சாலையானது கொரோனா காலப்பகுதிக்கு பின்னர் நெல் கொள்வனவு செய்யப்படாமையால் பல வருடங்களாக பாவனையற்று காணப்பட்டிருந்தது.இதனால்  பல சமூக சீர்கேடுகள், சட்ட விரோத செயற்பாடுகளும் குறித்த இடத்தில் இடம்பெறுவதனால்  குறித்த இடம் தெரிவு செய்யப்பட்டு தூய்மையான இலங்கை’ (Clean Sri Lanka) எனும் செயற்திட்டதின் கீழ் பொதுமக்களால் இன்று (12)  துப்பரவு செய்யப்பட்டிருந்தது.  குறித்த இடத்தில் பொதுமக்களிடையே கலாசார உணர்வை மேம்படுத்தும் வகையில் முதற்கட்டமாக எதிர்வரும் தைப்பொங்கல் தினத்தன்று மாபெரும் பொங்கல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தியின்  ஆதரவாளர்கள், கிராம மக்கள் இணைந்து குறித்த பணியினை மேற்கொண்டிருந்தார்கள்.

Advertisement

Advertisement

Advertisement