• May 03 2024

காலநிலையில் ஏற்பட்ட மாற்றம் - வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை..!!

Tamil nila / Apr 14th 2024, 6:43 am
image

Advertisement

நாட்டின் சில பகுதிகளில் இன்று (14) அதிக வெப்பம் மற்றும் பலத்த மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது  வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கொழும்பு, கம்பஹா, அனுராதபுரம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களின் சில இடங்களில் இன்று(14.04.2024)  வெப்பச் சுட்டெண் எச்சரிக்கை மட்டத்தை அடையுமென எதிர்வு கூறியுள்ளது.

வெப்ப பிடிப்புகள் மற்றும் வெப்ப சோர்வு தொடர்பில் வளிமண்டலத்திணைக்களம் எச்சரிக்கையை விடுத்துள்ளது.

மேல், சப்ரகமுவ, தெற்கு, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மேல், மத்திய, சப்ரகமுவ, மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சுமார் 75 மில்லிமீற்றர் வரையான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதேநேரம், மேல், மத்திய, சபரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் காலை வேளையில் பனிமூட்டமான காலநிலை எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.





காலநிலையில் ஏற்பட்ட மாற்றம் - வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை. நாட்டின் சில பகுதிகளில் இன்று (14) அதிக வெப்பம் மற்றும் பலத்த மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.அதாவது  வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கொழும்பு, கம்பஹா, அனுராதபுரம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களின் சில இடங்களில் இன்று(14.04.2024)  வெப்பச் சுட்டெண் எச்சரிக்கை மட்டத்தை அடையுமென எதிர்வு கூறியுள்ளது.வெப்ப பிடிப்புகள் மற்றும் வெப்ப சோர்வு தொடர்பில் வளிமண்டலத்திணைக்களம் எச்சரிக்கையை விடுத்துள்ளது.மேல், சப்ரகமுவ, தெற்கு, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.மேல், மத்திய, சப்ரகமுவ, மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சுமார் 75 மில்லிமீற்றர் வரையான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.அதேநேரம், மேல், மத்திய, சபரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் காலை வேளையில் பனிமூட்டமான காலநிலை எதிர்பார்க்கப்படுகின்றது.இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement