• Sep 17 2024

இந்தியாவில் நிலக்கரி உற்பத்தி அதிகரிப்பு! SamugamMedia

Tamil nila / Feb 26th 2023, 3:49 pm
image

Advertisement

இந்தியாவில் நிலக்கரி உற்பத்தி 16 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய நிலக்சரித்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. 


இது குறித்து மத்திய நிலக்கரித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் நிலக்கரி உற்பத்தி கடந்த சில ஆண்டுகளாக அபரிமித வளர்ச்சியைக் கண்டுள்ளது. இதன்காரணமாக வெளிநாடுகளில் இருந்து படிம எரிபொருளை இறக்குமதி செய்வது கணிசமாக கட்டுப்படுத்தப்படுகிறது. 


நுடப்பு நிதியாண்டில் கடந்த 2022 ஏப்ரல் முதல் 2023 ஜனவரி வரையிலான காலப்பகுதியில், மொத்த நிலக்கரி உற்பத்தி 69.82 கோடி டன்னாக இருந்தது. இது அதற்கு முந்தைய ஆண்டின் நிலக்கரி உற்பத்தியை விட அதிகமாகும். துற்போது நிலக்கரி உற்பத்தி 16 சதவீதம் அதிகரித்துள்ளது. 


மதிப்பீட்டு மாதங்களில் கோல் இந்தியா லிமிடெட் உற்பத்தி சுமார் 47.81 கோடி டன்னிலிருந்து 15.23 சதவீதம் அதிகரித்து 55.10 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. மின் நுகர்வு தொடர்ந்து அதிகரித்து வருவதால் நிலக்கரிக்கான தேவை கடுமையாக அதிகரித்து வருகிறது. 


இதேவேளை அடுத்து வரும் 2024-2025 வரையான நிதியாண்டில் 131 கோடி டன் நிலக்கரி உற்பத்தி செய்ய நிலக்கரித்துறை அமைச்சகம் இலக்கு நிர்ணயித்துள்ளது. இது 2030 ஆம் நிதியாண்டில் 150 கோடி டன்னாக உயர வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இந்தியாவில் நிலக்கரி உற்பத்தி அதிகரிப்பு SamugamMedia இந்தியாவில் நிலக்கரி உற்பத்தி 16 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய நிலக்சரித்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய நிலக்கரித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் நிலக்கரி உற்பத்தி கடந்த சில ஆண்டுகளாக அபரிமித வளர்ச்சியைக் கண்டுள்ளது. இதன்காரணமாக வெளிநாடுகளில் இருந்து படிம எரிபொருளை இறக்குமதி செய்வது கணிசமாக கட்டுப்படுத்தப்படுகிறது. நுடப்பு நிதியாண்டில் கடந்த 2022 ஏப்ரல் முதல் 2023 ஜனவரி வரையிலான காலப்பகுதியில், மொத்த நிலக்கரி உற்பத்தி 69.82 கோடி டன்னாக இருந்தது. இது அதற்கு முந்தைய ஆண்டின் நிலக்கரி உற்பத்தியை விட அதிகமாகும். துற்போது நிலக்கரி உற்பத்தி 16 சதவீதம் அதிகரித்துள்ளது. மதிப்பீட்டு மாதங்களில் கோல் இந்தியா லிமிடெட் உற்பத்தி சுமார் 47.81 கோடி டன்னிலிருந்து 15.23 சதவீதம் அதிகரித்து 55.10 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. மின் நுகர்வு தொடர்ந்து அதிகரித்து வருவதால் நிலக்கரிக்கான தேவை கடுமையாக அதிகரித்து வருகிறது. இதேவேளை அடுத்து வரும் 2024-2025 வரையான நிதியாண்டில் 131 கோடி டன் நிலக்கரி உற்பத்தி செய்ய நிலக்கரித்துறை அமைச்சகம் இலக்கு நிர்ணயித்துள்ளது. இது 2030 ஆம் நிதியாண்டில் 150 கோடி டன்னாக உயர வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement