• Nov 28 2024

சரிந்து விழுந்த மண்மேடு- லிந்துலை சுகாதார அதிகாரி காரியாலய சேவைகள் பாதிப்பு..!

Sharmi / Sep 6th 2024, 3:49 pm
image

லிந்துலை சுகாதார அதிகாரி காரியாலயம் பின்புறத்தில் உள்ள மண் மேட்டில் இருந்து கற்பாறைகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு சரிந்து விழுந்ததால் காரியாலயம் சேதமானது. 

இதன் காரணமாக இக் காரியாலயத்தின் சேவைகளை வழங்க வேண்டாம் என தெரிவிக்க பட்டதோடு மண்சரிவு அபாயம் விடுக்கப்பட்டுள்ளது. 

இருந்தபோதிலும். மக்களுக்கு சேவை வழங்கும் வகையில் மற்றுமொரு காரியாலயத்தை வழங்குமாறு கோரி நேற்று முன்தினம் வைத்தியசாலைக்கு வருகை தந்திருந்த பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  

இதனை அடுத்து. நுவரெலியா பிராந்திய சுகாதார பணிப்பாளர் DK அசேலபெரரா  ஆலோசனைக்கு அமைவாக  06 இன்று லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் தாதியர்கள் தங்கும் விடுதியை  தற்காலிகமாக காரியாலயமாக பயன்படுத்துமாறு அறிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து  மண் சரிவு அபாயம் விடுக்கப்பட்ட இடத்தில் உள்ள காரியாலயத்தில்  இருந்து அனைத்து பொருட்களும் இன்று புதிய இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டது..

அதேவேளை இது தொடர்பாக வைத்திய அதிகாரி துரைராஜா ரரோஷ்னி தெரிவிக்கையில். 

தற்போது இந்த காரியாலயம் மண் சரிவு அபாய மாக பல்வேறு சிரமங்களை எதிர் கொண்டதாகவும், இப்பிரதேசத்தில் உள்ள மக்கள் இந்த இடத்திற்கு தங்களுடைய சேவைகளை பெற்றுக் கொள்ள வருவதாகவும், 

இதன் காரணமாக மக்களை பாதுகாப்பதற்கும் தாய்மார்களை பாதுகாப்பதற்கும் இங்கு தொழில் செய்யும் ஊழியர்களை பாதுகாக்கும் வகையில் பல்வேறுபட்ட முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் அது சாத்தியப்படாத நிலையில் நேற்று அதிகாரி ஊடாக அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், இன்று முதல் அங்கு மக்களுக்கு சேவை வழங்க உள்ளதாகவும், தெரிவித்ததோடு தற்போது இடம் மாற்றம் செய்யப் பட்டு உள்ள இடமும் மண் சரிவு அபாயம் இருப்பதால் இது நிரந்தர தீர்வு இல்லை என இவர் தெரிவித்தார். 

அத்தோடு சுகாதார காரியாலயத்திற்கு தாதியர் விடுதியை வழங்கியதை எதிர்ப்பு தெரிவித்து இன்று முதல் தொடர்ச்சியாக லிந்துலை பிராந்திய வைத்தியசாலையில் தொழில் செய்யும் தாதிமார்கள் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.



சரிந்து விழுந்த மண்மேடு- லிந்துலை சுகாதார அதிகாரி காரியாலய சேவைகள் பாதிப்பு. லிந்துலை சுகாதார அதிகாரி காரியாலயம் பின்புறத்தில் உள்ள மண் மேட்டில் இருந்து கற்பாறைகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு சரிந்து விழுந்ததால் காரியாலயம் சேதமானது. இதன் காரணமாக இக் காரியாலயத்தின் சேவைகளை வழங்க வேண்டாம் என தெரிவிக்க பட்டதோடு மண்சரிவு அபாயம் விடுக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும். மக்களுக்கு சேவை வழங்கும் வகையில் மற்றுமொரு காரியாலயத்தை வழங்குமாறு கோரி நேற்று முன்தினம் வைத்தியசாலைக்கு வருகை தந்திருந்த பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  இதனை அடுத்து. நுவரெலியா பிராந்திய சுகாதார பணிப்பாளர் DK அசேலபெரரா  ஆலோசனைக்கு அமைவாக  06 இன்று லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் தாதியர்கள் தங்கும் விடுதியை  தற்காலிகமாக காரியாலயமாக பயன்படுத்துமாறு அறிவிக்கப்பட்டது.இதனை அடுத்து  மண் சரிவு அபாயம் விடுக்கப்பட்ட இடத்தில் உள்ள காரியாலயத்தில்  இருந்து அனைத்து பொருட்களும் இன்று புதிய இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.அதேவேளை இது தொடர்பாக வைத்திய அதிகாரி துரைராஜா ரரோஷ்னி தெரிவிக்கையில். தற்போது இந்த காரியாலயம் மண் சரிவு அபாய மாக பல்வேறு சிரமங்களை எதிர் கொண்டதாகவும், இப்பிரதேசத்தில் உள்ள மக்கள் இந்த இடத்திற்கு தங்களுடைய சேவைகளை பெற்றுக் கொள்ள வருவதாகவும், இதன் காரணமாக மக்களை பாதுகாப்பதற்கும் தாய்மார்களை பாதுகாப்பதற்கும் இங்கு தொழில் செய்யும் ஊழியர்களை பாதுகாக்கும் வகையில் பல்வேறுபட்ட முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் அது சாத்தியப்படாத நிலையில் நேற்று அதிகாரி ஊடாக அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், இன்று முதல் அங்கு மக்களுக்கு சேவை வழங்க உள்ளதாகவும், தெரிவித்ததோடு தற்போது இடம் மாற்றம் செய்யப் பட்டு உள்ள இடமும் மண் சரிவு அபாயம் இருப்பதால் இது நிரந்தர தீர்வு இல்லை என இவர் தெரிவித்தார். அத்தோடு சுகாதார காரியாலயத்திற்கு தாதியர் விடுதியை வழங்கியதை எதிர்ப்பு தெரிவித்து இன்று முதல் தொடர்ச்சியாக லிந்துலை பிராந்திய வைத்தியசாலையில் தொழில் செய்யும் தாதிமார்கள் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement