கிளிநொச்சி ஏ9 வீதிகளில் பகல், இரவு நேரங்களில் வீதிகளை ஆக்கிரமித்துள்ள கட்டாக்காலி மாடுகளால் பயணிகள் மற்றும் வாகன சாரதிகள் வீதியில் போக்குவரத்து செய்வதில் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக விசனம் தெரிவிக்கின்றனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் மூன்று பிரதேச சபை, உட்பட்ட A9 வீதி, பரந்தன் பூநகரி வீதி, மன்னார் பூநகரி ஊடாக யாழ்ப்பாணம் வீதி மற்றும் பரந்தன் முல்லைத்தீவு வீதி இவ்வாறு குறித்த வீதியில் கட்டாக்காலி மாடுகள் கூட்டம் கூட்டமாக வீதியின் நடுவே தரித்து நிற்பது, படுத்துறங்குவது என்பவற்றால் வாகன நெரிசல் ஏற்படுவதோடு அடிக்கடி விபத்துச் சம்பவங்களும் இடம்பெறுவதாகவும் பயணிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எனவே, பகல் மற்றும் இரவு நேரங்களில் அலைந்து திரியும் கட்டாக்காலி மாடுகள் தொல்லையை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள், உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் பொலிஸார் இணைந்து கால்நடை வளர்ப்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
கிளிநொச்சி வீதிகளை ஆக்கிரமித்துள்ள கட்டாக்காலி கால்நடைகளால் பயணிகள் பாதிப்பு. கிளிநொச்சி ஏ9 வீதிகளில் பகல், இரவு நேரங்களில் வீதிகளை ஆக்கிரமித்துள்ள கட்டாக்காலி மாடுகளால் பயணிகள் மற்றும் வாகன சாரதிகள் வீதியில் போக்குவரத்து செய்வதில் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக விசனம் தெரிவிக்கின்றனர்.கிளிநொச்சி மாவட்டத்தில் மூன்று பிரதேச சபை, உட்பட்ட A9 வீதி, பரந்தன் பூநகரி வீதி, மன்னார் பூநகரி ஊடாக யாழ்ப்பாணம் வீதி மற்றும் பரந்தன் முல்லைத்தீவு வீதி இவ்வாறு குறித்த வீதியில் கட்டாக்காலி மாடுகள் கூட்டம் கூட்டமாக வீதியின் நடுவே தரித்து நிற்பது, படுத்துறங்குவது என்பவற்றால் வாகன நெரிசல் ஏற்படுவதோடு அடிக்கடி விபத்துச் சம்பவங்களும் இடம்பெறுவதாகவும் பயணிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.எனவே, பகல் மற்றும் இரவு நேரங்களில் அலைந்து திரியும் கட்டாக்காலி மாடுகள் தொல்லையை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள், உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் பொலிஸார் இணைந்து கால்நடை வளர்ப்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.