• May 22 2024

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நஷ்டஈடு..! எமக்கு நீதியே வேண்டும்..! மனுவல் உதயச்சந்திரா ஆதங்கம்..!samugammedia

Sharmi / Jul 13th 2023, 4:03 pm
image

Advertisement

நாங்கள் ஒருபோதும் மரணச்சான்றிதழ் மற்றும் நஷ்டஈட்டை பெற்றுக்கொள்ள தயார் இல்லை.ஒப்படைக்கப்பட்ட எமது பிள்ளைகளுக்கு,உறவுகளுக்கு என்ன நடந்தது?,நாங்கள் பணத்திற்காக இத்தனை வருடங்கள் வீதியில் நின்று போராடவில்லை என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தெரிவித்துள்ளார்.

மன்னாரில் இன்று வியாழக்கிழமை(13) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மன்னார் மாவட்டத்தில் உள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுடன் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலக அதிகாரிகள்(ஓ.எம்.பி) மரணச் சான்றிதழ் மற்றும் நஷ்டஈட்டை பெற்றுக்கொள்ளுமாறு கதைத்து பார்த்தனர்.

ஆனால் அந்த விடையம் சரிவரவில்லை.அதனை தொடர்ந்து ஒவ்வொரு அம்மாக்களையும் அழைத்து பேசி பார்த்தனர்.அதுவும் சரி வரவில்லை.ஆனால் தற்போது அரச திணைக்களங்களை அழைத்து பேசுகின்றனர்.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு மரண சான்றிதழ் மற்றும் நஷ்ட ஈடு வழங்கும் நடவடிக்கை ஒருபோதும் இடம்பெறாது. குறித்த  மரண சான்றிதழ் மற்றும் நஷ்ட ஈடு எங்களுக்கு தேவை இல்லை என்பதை  ஓ.எம்.பி அலுவலக அதிகாரிகளுக்கு நாங்கள் தொடர்ந்தும் கூறி வருகின்றோம்.

பாதிக்கப்பட்ட எங்களுடன் கதைத்து பார்த்தார்கள் சரி வரவில்லை.தற்போது திணைக்களங்களை அழைத்து பேசி பார்க்கின்றார்கள். அதுவும் சரி வராது.நாங்கள் ஒரு போதும் அவர்களின் கோரிக்கைகளுக்கு ஒத்துப் போக மாட்டோம்.

நாங்கள் நீதியை யே கேட்டு நிற்கின்றோம்.எமது பிள்ளைகளுக்கு,உறவுகளுக்கு என்ன நடந்தது?,நாங்கள் பணத்திற்காக இத்தனை வருடங்கள் வீதியில் நின்று போராடவில்லை.

அவ்வாறு காசுக்காக போராடும் அம்மாக்களும் நாங்கள் இல்லை.ஓ.எம்.பி அலுவலக அதிகாரிகள் சகல விதத்திலும் எங்களை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர முயன்றார்கள். பயனளிக்கவில்லை. இந்த நிலையில் திணைக்கள அதிகாரிகள் ஊடாக எங்களிடம் பேச முற்படுகின்றனர்.

நாங்கள் ஒருபோதும் மரணச் சான்றிதழ் மற்றும் நஷ்டஈட்டை பெற்றுக்கொள்ள தயார் இல்லை. அரச திணைக்களத்தை வைத்து கதைக்கும் ஓ.எம்.பி அலுவலகத்தினர் மீண்டும் எங்களுடன் கதையுங்கள்.என அவர் மேலும் தெரிவித்தார்.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நஷ்டஈடு. எமக்கு நீதியே வேண்டும். மனுவல் உதயச்சந்திரா ஆதங்கம்.samugammedia நாங்கள் ஒருபோதும் மரணச்சான்றிதழ் மற்றும் நஷ்டஈட்டை பெற்றுக்கொள்ள தயார் இல்லை.ஒப்படைக்கப்பட்ட எமது பிள்ளைகளுக்கு,உறவுகளுக்கு என்ன நடந்தது,நாங்கள் பணத்திற்காக இத்தனை வருடங்கள் வீதியில் நின்று போராடவில்லை என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தெரிவித்துள்ளார்.மன்னாரில் இன்று வியாழக்கிழமை(13) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,மன்னார் மாவட்டத்தில் உள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுடன் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலக அதிகாரிகள்(ஓ.எம்.பி) மரணச் சான்றிதழ் மற்றும் நஷ்டஈட்டை பெற்றுக்கொள்ளுமாறு கதைத்து பார்த்தனர்.ஆனால் அந்த விடையம் சரிவரவில்லை.அதனை தொடர்ந்து ஒவ்வொரு அம்மாக்களையும் அழைத்து பேசி பார்த்தனர்.அதுவும் சரி வரவில்லை.ஆனால் தற்போது அரச திணைக்களங்களை அழைத்து பேசுகின்றனர்.காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு மரண சான்றிதழ் மற்றும் நஷ்ட ஈடு வழங்கும் நடவடிக்கை ஒருபோதும் இடம்பெறாது. குறித்த  மரண சான்றிதழ் மற்றும் நஷ்ட ஈடு எங்களுக்கு தேவை இல்லை என்பதை  ஓ.எம்.பி அலுவலக அதிகாரிகளுக்கு நாங்கள் தொடர்ந்தும் கூறி வருகின்றோம்.பாதிக்கப்பட்ட எங்களுடன் கதைத்து பார்த்தார்கள் சரி வரவில்லை.தற்போது திணைக்களங்களை அழைத்து பேசி பார்க்கின்றார்கள். அதுவும் சரி வராது.நாங்கள் ஒரு போதும் அவர்களின் கோரிக்கைகளுக்கு ஒத்துப் போக மாட்டோம்.நாங்கள் நீதியை யே கேட்டு நிற்கின்றோம்.எமது பிள்ளைகளுக்கு,உறவுகளுக்கு என்ன நடந்தது,நாங்கள் பணத்திற்காக இத்தனை வருடங்கள் வீதியில் நின்று போராடவில்லை.அவ்வாறு காசுக்காக போராடும் அம்மாக்களும் நாங்கள் இல்லை.ஓ.எம்.பி அலுவலக அதிகாரிகள் சகல விதத்திலும் எங்களை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர முயன்றார்கள். பயனளிக்கவில்லை. இந்த நிலையில் திணைக்கள அதிகாரிகள் ஊடாக எங்களிடம் பேச முற்படுகின்றனர்.நாங்கள் ஒருபோதும் மரணச் சான்றிதழ் மற்றும் நஷ்டஈட்டை பெற்றுக்கொள்ள தயார் இல்லை. அரச திணைக்களத்தை வைத்து கதைக்கும் ஓ.எம்.பி அலுவலகத்தினர் மீண்டும் எங்களுடன் கதையுங்கள்.என அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement