புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் பணிப்பாளர் நாயகத்திற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தாக்கல் செய்ய எதிர்பார்ப்பதாக உயர் நீதின்றில் சுற்றுச்சூழல் நீதி மையம் தெரிவித்துள்ளது.
மாதம்பே பகுதியில் சட்டவிரோத மணல் கடத்தல் தொடர்பில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மீறியமைக்காக இந்த வழக்கை தாக்கல் செய்வதாக நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
மாதம்பையில் சுமார் இருநூறு ஏக்கர் காணியில் சட்டவிரோத சிலிக்கா மணல் கடத்தல் காரணமாக ஏற்படும் சுற்றாடல் அழிவைத் தடுக்க உத்தரவிடுமாறு கோரி சுற்றுச்சூழல் நீதி மையம் உள்ளிட்ட சிலரால் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த மனு கடந்த ஜூலை 15ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, குறித்த அகழ்வுப் பணிகள் இடம்பெற்று வரும் பிரதேசத்தின் தற்போதைய நிலைமையை அவ்வாறே பேணுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
எனினும், புவியியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் பணிப்பாளர் நாயகம், அந்த உத்தரவை மீறி நான்கு புதிய மணல் அகழ்வு உரிமங்களை வழங்கியுள்ளதாகவும், அதன் மூலம் நீதிமன்ற உத்தரவை மீறி அவர் செயற்பட்டுள்ளதாகவும் மனுதாரர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி கலாநிதி ரவீந்திரநாத் தாபரே உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட பணிப்பாளர் நாயகத்தினால் நீதிமன்றத்தை அவமதிப்பு இடம்பெற்றிருந்தால், அது தொடர்பான ஆவணங்களை அடுத்த நீதிமன்ற திகதிக்கு முன் தாக்கல் செய்ய மனுதாரரின் சட்டத்தரணிகளுக்கு மூவரடங்கிய நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.
சுரங்கப் பணிப்பாளர் நாயகத்திற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் பணிப்பாளர் நாயகத்திற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தாக்கல் செய்ய எதிர்பார்ப்பதாக உயர் நீதின்றில் சுற்றுச்சூழல் நீதி மையம் தெரிவித்துள்ளது.மாதம்பே பகுதியில் சட்டவிரோத மணல் கடத்தல் தொடர்பில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மீறியமைக்காக இந்த வழக்கை தாக்கல் செய்வதாக நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.மாதம்பையில் சுமார் இருநூறு ஏக்கர் காணியில் சட்டவிரோத சிலிக்கா மணல் கடத்தல் காரணமாக ஏற்படும் சுற்றாடல் அழிவைத் தடுக்க உத்தரவிடுமாறு கோரி சுற்றுச்சூழல் நீதி மையம் உள்ளிட்ட சிலரால் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.குறித்த மனு கடந்த ஜூலை 15ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, குறித்த அகழ்வுப் பணிகள் இடம்பெற்று வரும் பிரதேசத்தின் தற்போதைய நிலைமையை அவ்வாறே பேணுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.எனினும், புவியியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் பணிப்பாளர் நாயகம், அந்த உத்தரவை மீறி நான்கு புதிய மணல் அகழ்வு உரிமங்களை வழங்கியுள்ளதாகவும், அதன் மூலம் நீதிமன்ற உத்தரவை மீறி அவர் செயற்பட்டுள்ளதாகவும் மனுதாரர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி கலாநிதி ரவீந்திரநாத் தாபரே உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.சம்பந்தப்பட்ட பணிப்பாளர் நாயகத்தினால் நீதிமன்றத்தை அவமதிப்பு இடம்பெற்றிருந்தால், அது தொடர்பான ஆவணங்களை அடுத்த நீதிமன்ற திகதிக்கு முன் தாக்கல் செய்ய மனுதாரரின் சட்டத்தரணிகளுக்கு மூவரடங்கிய நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.