யாழில் வன்முறையில் ஈடுபட்ட மூன்று இளைஞர்கள் ஒரு வாளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டு தெற்கு, வட்டுக்கோட்டை பகுதியில் மரணச் சடங்கு ஒன்று நேற்றையதினம் நடைபெற்றது.
இதன்போது மரணச் சடங்கு நடந்த இடத்தில் இருந்த சில இளைஞர்களிடையே முரண்பாடு ஏற்பட்டது.
இது குறித்து வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு பொலிஸார் வருகை தந்ததும் சிலர் தப்பிச் சென்றனர். அத்துடன் மூவர் ஒரு வாளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை விசாரணைகளின் பின்னர் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
யாழில் மரணச் சடங்கில் வெடித்த முரண்பாடு; மூன்று இளைஞர்கள் கைது. யாழில் வன்முறையில் ஈடுபட்ட மூன்று இளைஞர்கள் ஒரு வாளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டு தெற்கு, வட்டுக்கோட்டை பகுதியில் மரணச் சடங்கு ஒன்று நேற்றையதினம் நடைபெற்றது. இதன்போது மரணச் சடங்கு நடந்த இடத்தில் இருந்த சில இளைஞர்களிடையே முரண்பாடு ஏற்பட்டது. இது குறித்து வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.இந்நிலையில் சம்பவ இடத்திற்கு பொலிஸார் வருகை தந்ததும் சிலர் தப்பிச் சென்றனர். அத்துடன் மூவர் ஒரு வாளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை விசாரணைகளின் பின்னர் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.