• May 04 2024

பால் மா விலைகளில் சர்ச்சை..! இன்றிலிருந்து விலை குறையுமா?

Chithra / Apr 25th 2024, 10:41 am
image

Advertisement

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலையை மீண்டும் குறைப்பதற்கு சங்கம் என்ற ரீதியில் தீர்மானம் எடுக்கப்படவில்லை என பால் மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பால் மாவின் விலை திருத்தம் தொடர்பில் உத்தியோகபூர்வ கலந்துரையாடல் எதுவும் இடம்பெறவில்லை என அதன் ஊடகப் பேச்சாளர் திரு.அசோக பண்டார தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் பால் மா இறக்குமதியாளர்கள் 400 கிராமுக்கு 60 ரூபாவாலும், ஒரு கிலோகிராம் ஒன்றிற்கு 150 ரூபாவாலும் குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அதன்படி, தற்போது பால் மா சந்தையில் பல்வேறு விலைகளுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும், 

பால் மாவின் விலையை குறைப்பது தொடர்பில் இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அவர் தெரிவித்தார்

எவ்வாறாயினும், இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் மீண்டும் பால் மாவின் விலையை குறைப்பதாக நியூசிலாந்தில் இருந்து பால் மாவை இறக்குமதி செய்யும் நிறுவனம் ஒன்று நேற்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பால் மா விலைகளில் சர்ச்சை. இன்றிலிருந்து விலை குறையுமா இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலையை மீண்டும் குறைப்பதற்கு சங்கம் என்ற ரீதியில் தீர்மானம் எடுக்கப்படவில்லை என பால் மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.பால் மாவின் விலை திருத்தம் தொடர்பில் உத்தியோகபூர்வ கலந்துரையாடல் எதுவும் இடம்பெறவில்லை என அதன் ஊடகப் பேச்சாளர் திரு.அசோக பண்டார தெரிவித்துள்ளார்.கடந்த மாதம் பால் மா இறக்குமதியாளர்கள் 400 கிராமுக்கு 60 ரூபாவாலும், ஒரு கிலோகிராம் ஒன்றிற்கு 150 ரூபாவாலும் குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.அதன்படி, தற்போது பால் மா சந்தையில் பல்வேறு விலைகளுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும், பால் மாவின் விலையை குறைப்பது தொடர்பில் இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அவர் தெரிவித்தார்எவ்வாறாயினும், இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் மீண்டும் பால் மாவின் விலையை குறைப்பதாக நியூசிலாந்தில் இருந்து பால் மாவை இறக்குமதி செய்யும் நிறுவனம் ஒன்று நேற்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement