• May 03 2024

சீனாவில் உச்சத்தை தொட்ட கொரோனா: உலக நாடுகள் எடுத்த அதிரடி நடவடிக்கை!

Sharmi / Jan 2nd 2023, 9:40 am
image

Advertisement

சீனாவில் நாளுக்கு  நாள் கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வருகின்றது.

இந்நிலையில் அங்குள்ள வைத்தியசாலைகளில் கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு கூட இடவசதிகள் அற்ற நிலையில் வைத்தியசாலைகளுக்கு வெளியே வாகனங்களில்  வைத்து கொரோனா  தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் பரிதாப நிலை  அங்கு நிலவி வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.



இது இவ்வாறு இருக்கும் வேளையில் சீனாவில் கொரோனா உயிரிழப்புக்களும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.



இவ்வாறான நிலையில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் உட்பட அதிக நாடுகள் சீனாவில் இருந்து பயணிகளுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

இந்நிலையில், வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோ சீன பயணிகள் தங்கள் நாட்டுக்குள் நுழைவதற்கு தடை விதித்துள்ளது.



இதுதொடர்பாக மொராக்கோ வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்;

சீனாவில் கொரோனா தொற்று தொடர்பான சுகாதார நிலைமை மோசமடைந்துள்ளது. இந்த சூழலில் மொராக்கோவில் ஒரு புதிய கொரோனா அலை மற்றும் அதன் அனைத்து விளைவுகளையும் தவிர்ப்பதற்காக சீனாவில் இருந்து வரும் அனைத்துப் பயணிகளும்,மொராக்கோ எல்லைக்குள் நுழைவதை தடைசெய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை இரு நாட்டு மக்களுக்கு இடையேயான நேர்மையான நட்பையோ அல்லது இரு நாடுகளுக்கு இடையேயான கூட்டாண்மையையோ பாதிக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


சீனாவில் உச்சத்தை தொட்ட கொரோனா: உலக நாடுகள் எடுத்த அதிரடி நடவடிக்கை சீனாவில் நாளுக்கு  நாள் கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வருகின்றது.இந்நிலையில் அங்குள்ள வைத்தியசாலைகளில் கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு கூட இடவசதிகள் அற்ற நிலையில் வைத்தியசாலைகளுக்கு வெளியே வாகனங்களில்  வைத்து கொரோனா  தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் பரிதாப நிலை  அங்கு நிலவி வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.இது இவ்வாறு இருக்கும் வேளையில் சீனாவில் கொரோனா உயிரிழப்புக்களும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.இவ்வாறான நிலையில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் உட்பட அதிக நாடுகள் சீனாவில் இருந்து பயணிகளுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.இந்நிலையில், வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோ சீன பயணிகள் தங்கள் நாட்டுக்குள் நுழைவதற்கு தடை விதித்துள்ளது.இதுதொடர்பாக மொராக்கோ வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்;சீனாவில் கொரோனா தொற்று தொடர்பான சுகாதார நிலைமை மோசமடைந்துள்ளது. இந்த சூழலில் மொராக்கோவில் ஒரு புதிய கொரோனா அலை மற்றும் அதன் அனைத்து விளைவுகளையும் தவிர்ப்பதற்காக சீனாவில் இருந்து வரும் அனைத்துப் பயணிகளும்,மொராக்கோ எல்லைக்குள் நுழைவதை தடைசெய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை இரு நாட்டு மக்களுக்கு இடையேயான நேர்மையான நட்பையோ அல்லது இரு நாடுகளுக்கு இடையேயான கூட்டாண்மையையோ பாதிக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement