• Nov 12 2024

அரச ஓய்வூதியதாரர்களுக்கு வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு! வெளியான மகிழ்ச்சி தகவல்

Chithra / Aug 23rd 2024, 8:57 am
image

 

ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு 2025 ஜனவரி முதல் ரூ.12,500 வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

குறித்த தகவலை சம்பள முரண்பாடுகள் தொடர்பான ஜனாதிபதி நிபுணர் குழுவின் தலைவர் உதய ஆர். செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

2020ஆம் ஆண்டுக்கு முன் ஓய்வுபெற்ற அரச ஊழியர்களுக்கு இதுவரை வழங்கப்படாத ஊதிய உயர்வை வழங்கவும், அதற்கேற்ப அவர்களின் ஓய்வூதியத்தை திருத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என உதய ஆர். செனவிரத்ன குறிப்பிட்டுள்ளார்.

தற்போதுள்ள நிதி சாத்தியத்தின் அடிப்படையில் படிப்படியாக பொருத்தமாக பலன்களை வழங்க 2025 வரவுசெலவுத் திட்டத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும்.

இதேவேளை, அனைத்து அரச ஓய்வூதியர்களுக்கும் இடைக்கால கொடுப்பனவை வழங்குவது தொடர்பான சுற்றறிக்கையை பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் வெளியிட்டுள்ளார்.

ஒக்டோபர் மாதம் முதல் 3000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும் என சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரச ஓய்வூதியதாரர்களுக்கு வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு வெளியான மகிழ்ச்சி தகவல்  ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு 2025 ஜனவரி முதல் ரூ.12,500 வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.குறித்த தகவலை சம்பள முரண்பாடுகள் தொடர்பான ஜனாதிபதி நிபுணர் குழுவின் தலைவர் உதய ஆர். செனவிரத்ன தெரிவித்துள்ளார்.2020ஆம் ஆண்டுக்கு முன் ஓய்வுபெற்ற அரச ஊழியர்களுக்கு இதுவரை வழங்கப்படாத ஊதிய உயர்வை வழங்கவும், அதற்கேற்ப அவர்களின் ஓய்வூதியத்தை திருத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என உதய ஆர். செனவிரத்ன குறிப்பிட்டுள்ளார்.தற்போதுள்ள நிதி சாத்தியத்தின் அடிப்படையில் படிப்படியாக பொருத்தமாக பலன்களை வழங்க 2025 வரவுசெலவுத் திட்டத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும்.இதேவேளை, அனைத்து அரச ஓய்வூதியர்களுக்கும் இடைக்கால கொடுப்பனவை வழங்குவது தொடர்பான சுற்றறிக்கையை பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் வெளியிட்டுள்ளார்.ஒக்டோபர் மாதம் முதல் 3000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும் என சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement