• Mar 15 2025

அரச வேலைவாய்ப்பு பெற்று தருவதாக கூறி மோசடி: சிக்கிய ஜோடி

Chithra / Mar 14th 2025, 5:18 pm
image

  

அரசாங்க வேலை வாய்ப்பு பெற்று தருவதாகக் கூறி நான்கு பேரிடமிருந்து 50 லட்சத்திற்கு மேலான பணத்தை பெற்ற பெண்ணொருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சந்தேகநபர்கள் இருவரும், குட்டிகல - பதலங்கல பகுதியில் வைத்து இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், சந்தேக நபர்கள் எம்பிலிப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்ப்பட்டதையடுத்து, அதில் ஒருவரை 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்

மற்றைய சந்தேக நபரை தலா ஐந்து இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அரச வேலைவாய்ப்பு பெற்று தருவதாக கூறி மோசடி: சிக்கிய ஜோடி   அரசாங்க வேலை வாய்ப்பு பெற்று தருவதாகக் கூறி நான்கு பேரிடமிருந்து 50 லட்சத்திற்கு மேலான பணத்தை பெற்ற பெண்ணொருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த சந்தேகநபர்கள் இருவரும், குட்டிகல - பதலங்கல பகுதியில் வைத்து இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த நிலையில், சந்தேக நபர்கள் எம்பிலிப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்ப்பட்டதையடுத்து, அதில் ஒருவரை 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்மற்றைய சந்தேக நபரை தலா ஐந்து இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement