• Jun 26 2024

மதங்களுக்கு இடையில் முரண்பாடுகளை பரப்பிய தேரர் - பிடியாணை பிறப்பித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவு..! samugammedia

Chithra / Oct 25th 2023, 1:38 pm
image

Advertisement

 

மதங்களுக்கு இடையில் முரண்பாடுகளை பரப்பினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட ராஜாங்கனை சத்தா ரதன தேரரை கைது செய்யுமாறு கோட்டை நீதவான் திலின கமகே இன்று (25) உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பிலான வழக்கு திறந்த நீதிமன்றில் அழைக்கப்பட்ட போதே சந்தேகநபர்கள் நீதிமன்றில் ஆஜராகாததன் அடிப்படையில் பிடியாணை பிறப்பித்து நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இந்த உத்தரவை பிரகடனப்படுத்திய நீதவான், சந்தேகநபரான தேரரின் வெளிநாட்டுப் பயணத்தை தடை செய்து, குடிவரவு குடியகழ்வுக் கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கு அனுப்பி வைக்குமாறும் கூறினார்.

சந்தேகநபரான தேரருக்கு கிடைத்த பணம் தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளின் முன்னேற்றம் குறித்தும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றில் அறிவித்தது.


மதங்களுக்கு இடையில் முரண்பாடுகளை பரப்பிய தேரர் - பிடியாணை பிறப்பித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவு. samugammedia  மதங்களுக்கு இடையில் முரண்பாடுகளை பரப்பினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட ராஜாங்கனை சத்தா ரதன தேரரை கைது செய்யுமாறு கோட்டை நீதவான் திலின கமகே இன்று (25) உத்தரவிட்டுள்ளார்.சம்பவம் தொடர்பிலான வழக்கு திறந்த நீதிமன்றில் அழைக்கப்பட்ட போதே சந்தேகநபர்கள் நீதிமன்றில் ஆஜராகாததன் அடிப்படையில் பிடியாணை பிறப்பித்து நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.இந்த உத்தரவை பிரகடனப்படுத்திய நீதவான், சந்தேகநபரான தேரரின் வெளிநாட்டுப் பயணத்தை தடை செய்து, குடிவரவு குடியகழ்வுக் கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கு அனுப்பி வைக்குமாறும் கூறினார்.சந்தேகநபரான தேரருக்கு கிடைத்த பணம் தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளின் முன்னேற்றம் குறித்தும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றில் அறிவித்தது.

Advertisement

Advertisement

Advertisement