• May 10 2024

யாழ்.மாநகர சபை முன்னாள் முதல்வர் ஆனோல்ட்டுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு..! samugammedia

Chithra / May 17th 2023, 12:05 pm
image

Advertisement

யாழ் மாநகர சபை முன்னாள் முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

மேலும் குறித்த வழக்கு எதிர்வரும் ஜுலை 17ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தனது சட்டத்தரணியுடன் யாழ் மாநகர சபை முன்னாள் முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் சரணடைந்த நிலையில் பொலிஸாரினால் இன்று காலை கைது செய்யப்பட்டார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண தொகுதி கிளைக் கூட்டத்துக்கு பின்னர் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக சட்டத்தரணியுடன் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு சென்றபோதே இமானுவேல் ஆனோல்ட் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

அவர் இன்றைய தினம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில் சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண தொகுதி கிளைக் கூட்டத்துக்கு பின்னர் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த தாக்குதலை யாழ் மாநகர முன்னாள் முதல்வர் இமானுவேல் ஆனோலட் மேற்கொண்டதாக காயமடைந்தவர் பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

யாழ்.மாநகர சபை முன்னாள் முதல்வர் ஆனோல்ட்டுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு. samugammedia யாழ் மாநகர சபை முன்னாள் முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டார்.மேலும் குறித்த வழக்கு எதிர்வரும் ஜுலை 17ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தனது சட்டத்தரணியுடன் யாழ் மாநகர சபை முன்னாள் முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் சரணடைந்த நிலையில் பொலிஸாரினால் இன்று காலை கைது செய்யப்பட்டார்.இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண தொகுதி கிளைக் கூட்டத்துக்கு பின்னர் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக சட்டத்தரணியுடன் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு சென்றபோதே இமானுவேல் ஆனோல்ட் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.அவர் இன்றைய தினம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில் சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டார்.இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண தொகுதி கிளைக் கூட்டத்துக்கு பின்னர் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.குறித்த தாக்குதலை யாழ் மாநகர முன்னாள் முதல்வர் இமானுவேல் ஆனோலட் மேற்கொண்டதாக காயமடைந்தவர் பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement