• May 21 2024

வைத்தியர்கள் ஓய்வுபெறும் வயதெல்லை தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Chithra / Dec 14th 2022, 6:19 pm
image

Advertisement

அரச ஊழியர்களின் கட்டாய ஓய்வு தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் வைத்தியர்கள் மற்றும் விசேட வைத்திய நிபுணர்களை உள்ளடக்கியதை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி, ஜனவரி 25, 2023 வரை வைத்தியர்கள் மற்றும் விசேட வைத்திய நிபுணர்களுக்கு 60 வயது கட்டாய ஓய்வு வயது நடைமுறைப்படுத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

176 விசேட வைத்திய நிபுணர்கள் தாக்கல் செய்த ரிட் மனுவை பரிசீலித்து இந்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் என்ற வகையில் பிரதமர் தினேஷ் குணவர்தன, அரச துறை ஊழியர்கள் 60 வயதிற்குள் ஓய்வு பெறுவதை கட்டாயமாக்கும் வர்த்தமானி அறிவித்தலை டிசம்பர் 05 ஆம் திகதி வெளியிட்டார்.

அறிக்கையின்படி, அரசு ஊழியர்களின் கட்டாய ஓய்வு வயது ஜனவரி 01, 2023 முதல் நடைமுறைக்கு  வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


வைத்தியர்கள் ஓய்வுபெறும் வயதெல்லை தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு அரச ஊழியர்களின் கட்டாய ஓய்வு தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் வைத்தியர்கள் மற்றும் விசேட வைத்திய நிபுணர்களை உள்ளடக்கியதை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.அதன்படி, ஜனவரி 25, 2023 வரை வைத்தியர்கள் மற்றும் விசேட வைத்திய நிபுணர்களுக்கு 60 வயது கட்டாய ஓய்வு வயது நடைமுறைப்படுத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.176 விசேட வைத்திய நிபுணர்கள் தாக்கல் செய்த ரிட் மனுவை பரிசீலித்து இந்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் என்ற வகையில் பிரதமர் தினேஷ் குணவர்தன, அரச துறை ஊழியர்கள் 60 வயதிற்குள் ஓய்வு பெறுவதை கட்டாயமாக்கும் வர்த்தமானி அறிவித்தலை டிசம்பர் 05 ஆம் திகதி வெளியிட்டார்.அறிக்கையின்படி, அரசு ஊழியர்களின் கட்டாய ஓய்வு வயது ஜனவரி 01, 2023 முதல் நடைமுறைக்கு  வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement