• May 19 2024

காதலியுடன் காரில் சென்ற தயாசிறி எம்.பியின் மகனுக்கு நேர்ந்த கதி..! samugammedia

Chithra / Jul 5th 2023, 2:16 pm
image

Advertisement

பம்பலப்பிட்டியில்  காரில் தனது காதலியுடன் சென்று கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவின் மகனை அச்சுறுத்தி பணம் மற்றும் 160,000 ரூபா பெறுமதியான தங்க நகையை கொள்ளையடித்துச் சென்றதாகக் கூறப்படும்  நாட்டில் பதிவு செய்யப்பட்ட குற்றவாளியை  கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தனது காதலியுடன் இருந்த பாராளுமன்ற உறுப்பினரின் மகனின் கழுத்தில் கத்தியை  வைத்து  மிரட்டி  தங்க நகை மற்றும்  3,000 ரூபா பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றதாக திங்கட்கிழமை  (03) மாலை பம்பலப்பிட்டி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

சந்தேக நபர் முதலில் பணம் கேட்டதாகவும, பணம் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினரின் மகன் கூறியதையடுத்து, சந்தேக நபர் தனது இடுப்பிலிருந்த கத்தியை எடுத்து எம்பியின் மகனின் கழுத்தில் வைத்து மிரட்டியே பணத்தையும் தங்க நகையையும்  கொள்ளையிட்டுள்ளார்

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை அடையாளம் கண்டுள்ளதாகவும் அவரைக்  கைது செய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும்  பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

காதலியுடன் காரில் சென்ற தயாசிறி எம்.பியின் மகனுக்கு நேர்ந்த கதி. samugammedia பம்பலப்பிட்டியில்  காரில் தனது காதலியுடன் சென்று கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவின் மகனை அச்சுறுத்தி பணம் மற்றும் 160,000 ரூபா பெறுமதியான தங்க நகையை கொள்ளையடித்துச் சென்றதாகக் கூறப்படும்  நாட்டில் பதிவு செய்யப்பட்ட குற்றவாளியை  கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.தனது காதலியுடன் இருந்த பாராளுமன்ற உறுப்பினரின் மகனின் கழுத்தில் கத்தியை  வைத்து  மிரட்டி  தங்க நகை மற்றும்  3,000 ரூபா பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றதாக திங்கட்கிழமை  (03) மாலை பம்பலப்பிட்டி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  சந்தேக நபர் முதலில் பணம் கேட்டதாகவும, பணம் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினரின் மகன் கூறியதையடுத்து, சந்தேக நபர் தனது இடுப்பிலிருந்த கத்தியை எடுத்து எம்பியின் மகனின் கழுத்தில் வைத்து மிரட்டியே பணத்தையும் தங்க நகையையும்  கொள்ளையிட்டுள்ளார்இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை அடையாளம் கண்டுள்ளதாகவும் அவரைக்  கைது செய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும்  பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement