• Sep 17 2024

இலங்கையில் 8 மாவட்டங்களில் கொடிய நோய் பரவும் அபாயம்! மக்களுக்கு எச்சரிக்கை SamugamMedia

Chithra / Feb 27th 2023, 12:52 pm
image

Advertisement

நாட்டின் எட்டு மாவட்டங்களில் யானைக்கால் நோய் பரவும் அபாயம் காணப்படுகிறது.

கடந்த வருடத்தில் மாத்திரம் 400 புதிய நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என்று யானைக்கால் நோய்க் கட்டுப்பாட்டு அமைப்பு அறிவித்துள்ளது.

நோயைக் கட்டுப்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு வரும் சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று யானைக் கால் நோயைக் கட்டுப்பாட்டு அமைப்பின் பணிப்பாளர் மருத்துவர் உதய ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 

அனைத்து சுகாதார அதிகாரிகளும் உத்தியோகபூர்வ சீருடை மற்றும் உத்தியோகபூர்வ அடையாள அட்டைகளுடன் வீடுகளுக்கு வருகை தருவார்கள் என்றும் பணிப்பாளர் குறிப்பிட்டார்.


கொழும்பு, களுத்துறை, மாத்தறை, காலி, அம்பாந்தோட்டை, கம்பஹா, புத்தளம் மற்றும் குருநாகல் மாவட்டங்களில் இந்நோய் தொடர்ந்து பரவி வருகின்றது. 

கடந்த வருடத்தில் மாத்திரம் 400 புதிய நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். 2030ஆம் ஆண்டளவில் இந்நோயை இலங்கையிலிருந்து ஒழிப்பது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்.

நோயாளிகளைக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பதற்காக இரத்தப் பரிசோதனைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டது.

இலங்கையில் 8 மாவட்டங்களில் கொடிய நோய் பரவும் அபாயம் மக்களுக்கு எச்சரிக்கை SamugamMedia நாட்டின் எட்டு மாவட்டங்களில் யானைக்கால் நோய் பரவும் அபாயம் காணப்படுகிறது.கடந்த வருடத்தில் மாத்திரம் 400 புதிய நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என்று யானைக்கால் நோய்க் கட்டுப்பாட்டு அமைப்பு அறிவித்துள்ளது.நோயைக் கட்டுப்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு வரும் சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று யானைக் கால் நோயைக் கட்டுப்பாட்டு அமைப்பின் பணிப்பாளர் மருத்துவர் உதய ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அனைத்து சுகாதார அதிகாரிகளும் உத்தியோகபூர்வ சீருடை மற்றும் உத்தியோகபூர்வ அடையாள அட்டைகளுடன் வீடுகளுக்கு வருகை தருவார்கள் என்றும் பணிப்பாளர் குறிப்பிட்டார்.கொழும்பு, களுத்துறை, மாத்தறை, காலி, அம்பாந்தோட்டை, கம்பஹா, புத்தளம் மற்றும் குருநாகல் மாவட்டங்களில் இந்நோய் தொடர்ந்து பரவி வருகின்றது. கடந்த வருடத்தில் மாத்திரம் 400 புதிய நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். 2030ஆம் ஆண்டளவில் இந்நோயை இலங்கையிலிருந்து ஒழிப்பது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்.நோயாளிகளைக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பதற்காக இரத்தப் பரிசோதனைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement