• May 18 2024

கடனால் வந்த வினை...! பெண்ணின் முகத்தில் சிறுநீர் கழித்த நபர்கள்...!samugammedia

Sharmi / Sep 27th 2023, 4:44 pm
image

Advertisement

கடனாக வாங்கிய 1,500 ரூபாயை திருப்பிக் கொடுக்காததால் தலித் சமூகத்தை சேர்ந்தவரின் மனைவியின் ஆடையை களைந்து சித்திரவதை

செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இந்தியாவின் பீஹார் மாநிலத்தில் பாட்னா மாவட்டம் மோசிம்பூர் கிராமத்தில் தலித் சமூகத்தை சேர்ந்த தொழிலாளி பிரமோத் என்பவரிடம் கடன் வாங்கியுள்ளார்.

அவரின், மனைவி கடந்த 23ஆம் திகதி இரவு குடிநீர் பிடிப்பதற்காக குடத்துடன் பொது குழாயடிக்கு சென்றார். அப்போது பிரமோத்தும் அவரின் கூட்டாளிகளும் தொழிலாளியின் மனைவியை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று கடன் மற்றும் வட்டி பணத்தை தருமாறு மிரட்டினர்.

அவர் பணம் இல்லை என்று கூறியதால் ஆத்திரமடைந்து அந்த பெண்ணின் ஆடைகளைக் களைந்து, அடித்து உதைத்து சித்திரவதை செய்தனர்.

பிரமோத்தின் மகன் அன்சூ குமார், பெண்ணின் முகத்தில் சிறுநீர் கழித்தார்.உயிரைக் காப்பாற்ற அந்த பெண் ஆடையில்லாமலேயே வீட்டுக்கு தப்பியோடி வந்துவிட்டார். தனக்கு நேர்ந்த கொடுமையை கணவர், உறவினர்களிடம் அவர்கண்ணீர் மல்க கூறினார்.

இதுகுறித்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொலிஸ் அதிகாரி ஜிதேந்திர சிங் கங்குவார் கூறும்போது,

'இந்த வழக்கில் 5 தனிப்படைகள் அமைத்து பிரமோத் குமார்,அவரின் மகன் அன்சூ குமார் உட்பட 6 பேரை தேடி வருகிறோம். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆரம்ப சுகாதார நிலை
யத்தில் சிகிச்சை அளிக்கப்படுகிறது எனவும் தெரிவித்தார்.

இதற்கிடையில், ரூ1,500 கடனை கொடுத்து விட்டதாகவும் அதன்பிறகும் கூடுதல் வட்டி கேட்டு மிரட்டியதாகவும் கூறப்படுகிறது

கடனால் வந்த வினை. பெண்ணின் முகத்தில் சிறுநீர் கழித்த நபர்கள்.samugammedia கடனாக வாங்கிய 1,500 ரூபாயை திருப்பிக் கொடுக்காததால் தலித் சமூகத்தை சேர்ந்தவரின் மனைவியின் ஆடையை களைந்து சித்திரவதை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,இந்தியாவின் பீஹார் மாநிலத்தில் பாட்னா மாவட்டம் மோசிம்பூர் கிராமத்தில் தலித் சமூகத்தை சேர்ந்த தொழிலாளி பிரமோத் என்பவரிடம் கடன் வாங்கியுள்ளார்.அவரின், மனைவி கடந்த 23ஆம் திகதி இரவு குடிநீர் பிடிப்பதற்காக குடத்துடன் பொது குழாயடிக்கு சென்றார். அப்போது பிரமோத்தும் அவரின் கூட்டாளிகளும் தொழிலாளியின் மனைவியை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று கடன் மற்றும் வட்டி பணத்தை தருமாறு மிரட்டினர்.அவர் பணம் இல்லை என்று கூறியதால் ஆத்திரமடைந்து அந்த பெண்ணின் ஆடைகளைக் களைந்து, அடித்து உதைத்து சித்திரவதை செய்தனர். பிரமோத்தின் மகன் அன்சூ குமார், பெண்ணின் முகத்தில் சிறுநீர் கழித்தார்.உயிரைக் காப்பாற்ற அந்த பெண் ஆடையில்லாமலேயே வீட்டுக்கு தப்பியோடி வந்துவிட்டார். தனக்கு நேர்ந்த கொடுமையை கணவர், உறவினர்களிடம் அவர்கண்ணீர் மல்க கூறினார். இதுகுறித்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.பொலிஸ் அதிகாரி ஜிதேந்திர சிங் கங்குவார் கூறும்போது,'இந்த வழக்கில் 5 தனிப்படைகள் அமைத்து பிரமோத் குமார்,அவரின் மகன் அன்சூ குமார் உட்பட 6 பேரை தேடி வருகிறோம். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்படுகிறது எனவும் தெரிவித்தார்.இதற்கிடையில், ரூ1,500 கடனை கொடுத்து விட்டதாகவும் அதன்பிறகும் கூடுதல் வட்டி கேட்டு மிரட்டியதாகவும் கூறப்படுகிறது

Advertisement

Advertisement

Advertisement