இலங்கை போக்குவரத்து சபையினால் கைவிடப்பட்டுள்ள அதிசொகுசு பேருந்துகளை புனரமைத்து மீண்டும் சேவையில் ஈடுபடுத்த போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான ஒருதொகை அதிசொகுசு பேருந்துகள் ஒரு காலத்தில் சுற்றுலாத்துறையின் பயணங்களுக்காக பயன்படுத்தப்பட்டிருந்தன.
அதன் பின்னர் சிறு திருத்தங்கள் காரணமாக குறித்த பேருந்துகள் சுற்றுலாத்துறையில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டதுடன் போக்குவரத்துச் சபையும் குறித்த பேருந்துகளை பயன்பாட்டில் இருந்து ஒதுக்கி வைத்திருந்தது.
இந்நிலையில் அவ்வாறு ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த 17 அதிசொகுசுப் பேருந்துகளை புனரமைத்து மீண்டும் சேவையில் ஈடுபடுத்த போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
கைவிடப்பட்டுள்ள அதிசொகுசு பேருந்துகள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம். இலங்கை போக்குவரத்து சபையினால் கைவிடப்பட்டுள்ள அதிசொகுசு பேருந்துகளை புனரமைத்து மீண்டும் சேவையில் ஈடுபடுத்த போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான ஒருதொகை அதிசொகுசு பேருந்துகள் ஒரு காலத்தில் சுற்றுலாத்துறையின் பயணங்களுக்காக பயன்படுத்தப்பட்டிருந்தன.அதன் பின்னர் சிறு திருத்தங்கள் காரணமாக குறித்த பேருந்துகள் சுற்றுலாத்துறையில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டதுடன் போக்குவரத்துச் சபையும் குறித்த பேருந்துகளை பயன்பாட்டில் இருந்து ஒதுக்கி வைத்திருந்தது.இந்நிலையில் அவ்வாறு ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த 17 அதிசொகுசுப் பேருந்துகளை புனரமைத்து மீண்டும் சேவையில் ஈடுபடுத்த போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.