• May 17 2024

ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு தலைவர் என்ற பதவிநிலை இல்லை - கூட்டத்தில் தீர்மானம்.! samugammedia

Chithra / Jun 18th 2023, 3:05 pm
image

Advertisement

ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு தலைவர் என்ற பதவிநிலை இல்லை என இன்றைய கலந்துரையாடலின் போது ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இணைத் தலைவர்களாக நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், த.சித்தார்த்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் 

பிறேமச்சந்திரன், சிறிகாந்தா மற்றும் வேந்தன் ஆகியோர் செயற்படுவார்கள் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் முக்கியமான கூட்டமொன்று இன்று காலை 10 மணியளவில் வவுனியாவில் உள்ள தனியார் விடுதியில் தற்போது நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் சமூகத்தின் செய்தி பிரிவு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிறேமச்சந்திரனை தொடர்பு கொண்ட போது கூட்டம் இன்று நிறைவடையவில்லை என்றும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு தலைவர் என்ற பதவிநிலை இல்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலதிக விடயத்தை சில மணி நேரங்களில் எதிர்பாருங்கள்.

இதேவேளை கூட்டணியின் தலைமைப் பொறுப்பினை முதலில் செல்வம் அடைக்கலநாதன் பெற்றுக்கொள்வதற்கும், பின்னர் கிரமமாக சுழற்சி முறையில் ஏனைய தலைவர்களுக்கு வழங்குவதற்கும் முன்மொழிவொன்று செய்யப்பட்டது.

ஆனால் இதில் மாறுபட்ட கருத்துக்கள் தெரிவிக்கப்பட்ட நிலையில் புளொட்டின் தலைவர் சித்தார்த்தனுக்கு முதற்சுற்றில் தலைமைத்துவத்தினை வகிப்பது பற்றி ஆராயப்பட்டுள்ளது. 

இதற்கு ஈ.பி.ஆர்.எல்.எப். தரப்பிலிருந்தும் சாதகமான சமிக்ஞை வழங்கப்பட்டுள்ளது. எனினும், புளொட்டின் வசமுள்ள ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் செயலாளர் பதவியில் ஆர்.ராகவன் உள்ளார். 

ஆகவே, தலைவரும், செயலாளரும் ஒரே கட்சியில் இருப்பதை ஏனைய கட்சிகள் விரும்பாத நிலையில் கூட்டணிக்கு இணைத்தலைவர்கள் என்ற பதவிநிலையே காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு தலைவர் என்ற பதவிநிலை இல்லை - கூட்டத்தில் தீர்மானம். samugammedia ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு தலைவர் என்ற பதவிநிலை இல்லை என இன்றைய கலந்துரையாடலின் போது ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.அத்துடன் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இணைத் தலைவர்களாக நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், த.சித்தார்த்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிறேமச்சந்திரன், சிறிகாந்தா மற்றும் வேந்தன் ஆகியோர் செயற்படுவார்கள் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் முக்கியமான கூட்டமொன்று இன்று காலை 10 மணியளவில் வவுனியாவில் உள்ள தனியார் விடுதியில் தற்போது நடைபெற்று வருகின்றது.இந்நிலையில் சமூகத்தின் செய்தி பிரிவு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிறேமச்சந்திரனை தொடர்பு கொண்ட போது கூட்டம் இன்று நிறைவடையவில்லை என்றும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு தலைவர் என்ற பதவிநிலை இல்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.மேலதிக விடயத்தை சில மணி நேரங்களில் எதிர்பாருங்கள்.இதேவேளை கூட்டணியின் தலைமைப் பொறுப்பினை முதலில் செல்வம் அடைக்கலநாதன் பெற்றுக்கொள்வதற்கும், பின்னர் கிரமமாக சுழற்சி முறையில் ஏனைய தலைவர்களுக்கு வழங்குவதற்கும் முன்மொழிவொன்று செய்யப்பட்டது.ஆனால் இதில் மாறுபட்ட கருத்துக்கள் தெரிவிக்கப்பட்ட நிலையில் புளொட்டின் தலைவர் சித்தார்த்தனுக்கு முதற்சுற்றில் தலைமைத்துவத்தினை வகிப்பது பற்றி ஆராயப்பட்டுள்ளது. இதற்கு ஈ.பி.ஆர்.எல்.எப். தரப்பிலிருந்தும் சாதகமான சமிக்ஞை வழங்கப்பட்டுள்ளது. எனினும், புளொட்டின் வசமுள்ள ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் செயலாளர் பதவியில் ஆர்.ராகவன் உள்ளார். ஆகவே, தலைவரும், செயலாளரும் ஒரே கட்சியில் இருப்பதை ஏனைய கட்சிகள் விரும்பாத நிலையில் கூட்டணிக்கு இணைத்தலைவர்கள் என்ற பதவிநிலையே காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement