• Jun 13 2024

பெரியவர்களுடன் நீராடச் சென்ற 11 வயதான சிறுவனுக்கு ஏற்பட்ட கதி..! samugammedia

Chithra / Jun 18th 2023, 2:54 pm
image

Advertisement

களுத்துறை கடற்கரைக்கு பெரியவர்களுடன் நீராடுவதற்காகச் சென்றிருந்த 11 வயது சிறுவன் கடற்கரையில் தனிமையில் விடப்பட்ட நிலையில், களுத்துறை தெற்கு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டான்.

நேற்று (17) காலை பெரியவர்கள் சிலருடன்   நீராடச் சென்ற அந்த சிறுவன் தனிமையில் விடப்பட்ட நிலையில், களுத்துறை ரயில்  நிலையத்துக்கு அருகிலிருந்த முச்சக்கரவண்டி சாரதிகளால் மீட்கப்பட்டு, களுத்துறை தெற்கு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளான்.

மதுபோதையில் இருந்த ஒருவர் அச்சிறுவனை  கொண்டு செல்ல முற்பட்டபோதே, முச்சக்கர வண்டி சாரதிகள், அந்த நபரிடமிருந்து சிறுவனை  மீட்டு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

களுத்துறை தெற்கு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் பணிப்புரையின் பேரில்,  சிறுவனின் அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டு, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டான்.

பெரியவர்களுடன் நீராடச் சென்ற 11 வயதான சிறுவனுக்கு ஏற்பட்ட கதி. samugammedia களுத்துறை கடற்கரைக்கு பெரியவர்களுடன் நீராடுவதற்காகச் சென்றிருந்த 11 வயது சிறுவன் கடற்கரையில் தனிமையில் விடப்பட்ட நிலையில், களுத்துறை தெற்கு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டான்.நேற்று (17) காலை பெரியவர்கள் சிலருடன்   நீராடச் சென்ற அந்த சிறுவன் தனிமையில் விடப்பட்ட நிலையில், களுத்துறை ரயில்  நிலையத்துக்கு அருகிலிருந்த முச்சக்கரவண்டி சாரதிகளால் மீட்கப்பட்டு, களுத்துறை தெற்கு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளான்.மதுபோதையில் இருந்த ஒருவர் அச்சிறுவனை  கொண்டு செல்ல முற்பட்டபோதே, முச்சக்கர வண்டி சாரதிகள், அந்த நபரிடமிருந்து சிறுவனை  மீட்டு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.களுத்துறை தெற்கு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் பணிப்புரையின் பேரில்,  சிறுவனின் அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டு, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டான்.

Advertisement

Advertisement

Advertisement