• Sep 17 2024

செயற்பாட்டாளர் இஷாம் மரிக்கார் தாக்கப்பட்டமையை கண்டித்து புத்தளம் பெரிய பள்ளிக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்..!samugammedia

Sharmi / Jul 7th 2023, 4:07 pm
image

Advertisement

இம்முறை உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடவிருந்த வேட்பாளரும் க்லீன் நேஷன் அமைப்பின் தலைவரும் சமூக செயற்பாட்டாளருமான இஷாம் மரிக்கார் தாக்கபட்டமையைக் கண்டித்து புத்தளம் பெரிய பள்ளிக்கு முன்பாக இன்று ஜும்ஆத் தொழுகையைத் தொடர்ந்து  ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த ஆர்ப்பாட்டம் புத்தளம் மாவட்ட இளைஞர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டது.

இதன்போது கோஷங்களை எழுப்பியவாறும் பதாதைகளை ஏந்தியவாறும் ஆர்ப்பாட்டக்காரர்கள குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் பொலிஸாரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இஷாம் மரிக்கார் தாக்கப்பட்டு 9 நாள் கடந்தும் இதுவரையிலும் எவரும் கைது செய்யப்படவில்லையென்றும் குறித்த தாக்குதலுக்கு மூலதனமாக பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம்  இருப்பதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர் ஒருவர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தார். 

அத்துடன் அண்மையில் இடம்பெற்ற தனியார் நிகழ்ச்சியொன்றில் புத்தளம் பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக கருத்துக்களை முன்வைத்திருந்தமையினால் இஷாம் மரிக்கார் தாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.



செயற்பாட்டாளர் இஷாம் மரிக்கார் தாக்கப்பட்டமையை கண்டித்து புத்தளம் பெரிய பள்ளிக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்.samugammedia இம்முறை உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடவிருந்த வேட்பாளரும் க்லீன் நேஷன் அமைப்பின் தலைவரும் சமூக செயற்பாட்டாளருமான இஷாம் மரிக்கார் தாக்கபட்டமையைக் கண்டித்து புத்தளம் பெரிய பள்ளிக்கு முன்பாக இன்று ஜும்ஆத் தொழுகையைத் தொடர்ந்து  ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த ஆர்ப்பாட்டம் புத்தளம் மாவட்ட இளைஞர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டது.இதன்போது கோஷங்களை எழுப்பியவாறும் பதாதைகளை ஏந்தியவாறும் ஆர்ப்பாட்டக்காரர்கள குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த ஆர்ப்பாட்டத்தில் பொலிஸாரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.இஷாம் மரிக்கார் தாக்கப்பட்டு 9 நாள் கடந்தும் இதுவரையிலும் எவரும் கைது செய்யப்படவில்லையென்றும் குறித்த தாக்குதலுக்கு மூலதனமாக பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம்  இருப்பதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர் ஒருவர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தார். அத்துடன் அண்மையில் இடம்பெற்ற தனியார் நிகழ்ச்சியொன்றில் புத்தளம் பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக கருத்துக்களை முன்வைத்திருந்தமையினால் இஷாம் மரிக்கார் தாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement