• Sep 30 2024

சம்பள உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வவுனியாவில் ஆர்ப்பாட்ட பேரணி!SamugamMedia

Sharmi / Mar 15th 2023, 12:13 pm
image

Advertisement

சம்பள உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் தொழிற்சங்கங்களால் ஆர்பாட்ட பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா பழையபேருந்து நிலையப்பகுதியில் இன்று (15) ஆரம்பமான குறித்த பேரணி மணிக்கூட்டு சந்தியை அடைந்து அங்கிருந்து வலயக்கல்வி அலுவலகம்வரை சென்று மீண்டும் பழையபேருந்து நிலையத்தில் முடிவடைந்தது. 

இதன்போது கருத்து தெரிவித்த அவர்கள்,

பொருளாதார நெருக்கடி காரணமாக ஆசியர்கள் அதிபர்கள் உட்பட அனைத்து மக்களும் பாதிக்கப்பட்டிருக்கின்றோம். சுபோதினி ஆணைக்குழுவின் படி மூன்றில் ஒருபகுதி சம்பள உயர்வு வழங்கப்பட்டது. மீதி அதிகரிப்பு உடனடியாக வழங்கப்பட வேண்டும்.

அத்துடன் விலையேற்றத்தை கட்டுப்படுத்தி வரிச்சுமையை குறைத்து, மக்கள் இயல்பு வாழ்க்கையை முன்னெடுப்பதற்கான நடவடிக்கையினை எடுக்க வேண்டும். என்றனர்

இலங்கை ஆசிரியர்சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த ஆர்ப்பாட்டத்தில் இலங்கை ஆசிரியர் சேவைசங்கம், மருத்துவ சேவைசங்கம், சமூகநீதிக்கான வெகுஜன அமைப்பு, பெண் விடுதலை சிந்தனை அமைப்பு ஆகியவை ஆதரவு வழங்கியதுடன் பேரணியில் பலர் கலந்து கொண்டனர்.


சம்பள உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வவுனியாவில் ஆர்ப்பாட்ட பேரணிSamugamMedia சம்பள உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் தொழிற்சங்கங்களால் ஆர்பாட்ட பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.வவுனியா பழையபேருந்து நிலையப்பகுதியில் இன்று (15) ஆரம்பமான குறித்த பேரணி மணிக்கூட்டு சந்தியை அடைந்து அங்கிருந்து வலயக்கல்வி அலுவலகம்வரை சென்று மீண்டும் பழையபேருந்து நிலையத்தில் முடிவடைந்தது. இதன்போது கருத்து தெரிவித்த அவர்கள்,பொருளாதார நெருக்கடி காரணமாக ஆசியர்கள் அதிபர்கள் உட்பட அனைத்து மக்களும் பாதிக்கப்பட்டிருக்கின்றோம். சுபோதினி ஆணைக்குழுவின் படி மூன்றில் ஒருபகுதி சம்பள உயர்வு வழங்கப்பட்டது. மீதி அதிகரிப்பு உடனடியாக வழங்கப்பட வேண்டும். அத்துடன் விலையேற்றத்தை கட்டுப்படுத்தி வரிச்சுமையை குறைத்து, மக்கள் இயல்பு வாழ்க்கையை முன்னெடுப்பதற்கான நடவடிக்கையினை எடுக்க வேண்டும். என்றனர்இலங்கை ஆசிரியர்சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த ஆர்ப்பாட்டத்தில் இலங்கை ஆசிரியர் சேவைசங்கம், மருத்துவ சேவைசங்கம், சமூகநீதிக்கான வெகுஜன அமைப்பு, பெண் விடுதலை சிந்தனை அமைப்பு ஆகியவை ஆதரவு வழங்கியதுடன் பேரணியில் பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement