அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று(02) வீழ்ச்சி அடைந்துள்ளது.
அதன்படி,
மக்கள் வங்கியில்- அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 321.15 ரூபாவிலிருந்து 321.40 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 332.92 ரூபாவிலிருந்து 333.17 ரூபாவாக உயர்ந்துள்ளது.
கொமர்ஷல் வங்கியில்- அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 321.15 ரூபாவிலிருந்து 321.64 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 331.50 ரூபாவிலிருந்து 332.00 ரூபாவாக உயர்ந்துள்ளது.
சம்பத் வங்கியில்- அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 322 ரூபாவிலிருந்து 323 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 332 ரூபாவிலிருந்து 333 ரூபாவாக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.