• May 17 2024

இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி..! நிதி இராஜாங்க அமைச்சர் பதில்..!samugammedia

Sharmi / Jul 31st 2023, 2:19 pm
image

Advertisement

இலங்கை ரூபாவின் அண்மைய வீழ்ச்சியானது டொலரின் தேவை மற்றும் விநியோகத்தில் ஏற்பட்ட மாற்றங்களினால் உண்டான தற்காலிக நிலைமை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

அமெரிக்க டொலர் மற்றும் இலங்கை ரூபாவின் பெறுமதியினை சந்தை நிலவரத்தின் அடிப்படையில் நிர்வாகிக்க அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.

இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கையில் முதலீடு செய்த வைப்பாளர்களுக்கு வழங்குவதற்கு வங்கிகள் போதுமான டொலர்களை சேகரிக்க வேண்டியதன் அவசியத்தால் நிலைமை பாதிக்கப்பட்டது.

இதன் காரணமாக வங்கிகள் சந்தையில் டொலர்களை வெளியிடுவதை தற்காலிகமாக கட்டுப்படுத்தலாம்.

இது ஒரு தற்காலிக நிலையே அன்றி, நீண்ட காலப் போக்கு அல்ல என்றும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, கடந்த சில நாட்களாக ரூபாவின் பெறுமதி கு​றைவடைந்து வருவதால்  தேசிய தொழில் முயற்சியாளர்களின் வர்த்தகங்கள் வீழ்ச்சியடைந்துள்ளதாக தேசிய வர்த்தகர் சுதந்திர சங்கத்தின் தலைவர் சுசந்த லியனாராச்சி கூறுகிறார்.

இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி. நிதி இராஜாங்க அமைச்சர் பதில்.samugammedia இலங்கை ரூபாவின் அண்மைய வீழ்ச்சியானது டொலரின் தேவை மற்றும் விநியோகத்தில் ஏற்பட்ட மாற்றங்களினால் உண்டான தற்காலிக நிலைமை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.அமெரிக்க டொலர் மற்றும் இலங்கை ரூபாவின் பெறுமதியினை சந்தை நிலவரத்தின் அடிப்படையில் நிர்வாகிக்க அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கையில் முதலீடு செய்த வைப்பாளர்களுக்கு வழங்குவதற்கு வங்கிகள் போதுமான டொலர்களை சேகரிக்க வேண்டியதன் அவசியத்தால் நிலைமை பாதிக்கப்பட்டது.இதன் காரணமாக வங்கிகள் சந்தையில் டொலர்களை வெளியிடுவதை தற்காலிகமாக கட்டுப்படுத்தலாம்.இது ஒரு தற்காலிக நிலையே அன்றி, நீண்ட காலப் போக்கு அல்ல என்றும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.இதேவேளை, கடந்த சில நாட்களாக ரூபாவின் பெறுமதி கு​றைவடைந்து வருவதால்  தேசிய தொழில் முயற்சியாளர்களின் வர்த்தகங்கள் வீழ்ச்சியடைந்துள்ளதாக தேசிய வர்த்தகர் சுதந்திர சங்கத்தின் தலைவர் சுசந்த லியனாராச்சி கூறுகிறார்.

Advertisement

Advertisement

Advertisement