பொலிஸ் தலைமையகத்தில் 24 மணி நேர விசேட செயற்பாட்டு மையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
நிலவும் சீரற்ற காலநிலையினால் ஏற்படும் அனர்த்தங்கள் தொடர்பில் பொதுமக்கள் தொடர்பு கொள்வதற்கும் ஒருங்கிணைப்பதற்கும் வசதியாக இந்த செயற்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய பொதுமக்கள் 0112 027 148 ,0112 472 757 ,0112 430 912 மற்றும் 0112 013 051 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் ஊடாக தொடர்புகொள்ளலாம்.
இதேவேளை 'disaster.ops@police.gov.lk' என்ற மின்னஞ்சல் ஊடாகவும் தொடர்பு கொள்ள முடியும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் தென்மேற்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட ஆழமான காற்றழுத்த தாழ்வு நிலையானது திருகோணமலைக்கு தென்கிழக்கே 190 கிலோ மீற்றர் தொலைவில் நேற்றிரவு இரவு 11.30 மணியளவில் நிலைகொண்டிருந்தது.
இது இலங்கையின் கிழக்குக் கடற்கரைக்கு அருகில் வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து இன்று சூறாவளியாக மேலும் வலுவடையும்.
இதனால், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேற்கு, மத்திய மாகாணங்களில் மிக பலத்த மழை, பலத்த காற்று வீசக்கூடும்.
வடக்கு, வடமத்திய, மத்திய, மேற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, மட்டக்களப்பு, கேகாலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
சில இடங்களில் 150 மில்லி மீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
சில இடங்களில் 75 மி. மீக்கு மேல் பலத்த மழை பதிவாகலாம்.
வடக்கு, வடமத்திய, மத்திய, மேற்கு, வடமேற்கு, தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்று வடகிழக்கு திசையில் வீசும்.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோமீற்றர்களாக காணப்படும்.
மேலும், காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும்.
நாட்டைச் சுற்றியுள்ள கடல் பகுதிகள் சில சமயங்களில் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும்.
மட்டக்களப்பிலிருந்து திருகோணமலை ஊடாக காங்கேசன்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் அலைகள் அதிகரிக்கலாம்.
மட்டக்களப்பிலிருந்து திருகோணமலை ஊடாக காங்கேசன்துறை வரையான கரையோரப் பகுதிகளுக்கு அண்மித்த கடற்பரப்புகளில் அலைகள் சீற்றம் காரணமாக எழுச்சியுடன் காணப்படும்.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன் கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.
இதனால், கடற்படை மற்றும் மீனவ சமூகத்தினரும் இதனால் மறு அறிவித்தல் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
இன்று சூறாவளியாக வலுவடையும் தாழமுக்கம் பொலிஸ் தலைமையகத்தின் அவசர அறிவிப்பு பொலிஸ் தலைமையகத்தில் 24 மணி நேர விசேட செயற்பாட்டு மையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.நிலவும் சீரற்ற காலநிலையினால் ஏற்படும் அனர்த்தங்கள் தொடர்பில் பொதுமக்கள் தொடர்பு கொள்வதற்கும் ஒருங்கிணைப்பதற்கும் வசதியாக இந்த செயற்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது.இதற்கமைய பொதுமக்கள் 0112 027 148 ,0112 472 757 ,0112 430 912 மற்றும் 0112 013 051 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் ஊடாக தொடர்புகொள்ளலாம்.இதேவேளை 'disaster.ops@police.gov.lk' என்ற மின்னஞ்சல் ஊடாகவும் தொடர்பு கொள்ள முடியும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.இந்நிலையில் தென்மேற்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட ஆழமான காற்றழுத்த தாழ்வு நிலையானது திருகோணமலைக்கு தென்கிழக்கே 190 கிலோ மீற்றர் தொலைவில் நேற்றிரவு இரவு 11.30 மணியளவில் நிலைகொண்டிருந்தது.இது இலங்கையின் கிழக்குக் கடற்கரைக்கு அருகில் வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து இன்று சூறாவளியாக மேலும் வலுவடையும்.இதனால், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேற்கு, மத்திய மாகாணங்களில் மிக பலத்த மழை, பலத்த காற்று வீசக்கூடும்.வடக்கு, வடமத்திய, மத்திய, மேற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, மட்டக்களப்பு, கேகாலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.சில இடங்களில் 150 மில்லி மீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.சில இடங்களில் 75 மி. மீக்கு மேல் பலத்த மழை பதிவாகலாம்.வடக்கு, வடமத்திய, மத்திய, மேற்கு, வடமேற்கு, தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்று வடகிழக்கு திசையில் வீசும்.நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோமீற்றர்களாக காணப்படும்.மேலும், காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும்.நாட்டைச் சுற்றியுள்ள கடல் பகுதிகள் சில சமயங்களில் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும்.மட்டக்களப்பிலிருந்து திருகோணமலை ஊடாக காங்கேசன்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் அலைகள் அதிகரிக்கலாம்.மட்டக்களப்பிலிருந்து திருகோணமலை ஊடாக காங்கேசன்துறை வரையான கரையோரப் பகுதிகளுக்கு அண்மித்த கடற்பரப்புகளில் அலைகள் சீற்றம் காரணமாக எழுச்சியுடன் காணப்படும்.இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன் கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.இதனால், கடற்படை மற்றும் மீனவ சமூகத்தினரும் இதனால் மறு அறிவித்தல் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.