• Nov 25 2024

வட மாகாணத்தில் சுற்றுலாத் தளங்கள் அபிவிருத்தி...! வடக்கு ஆளுநரை சந்தித்த இந்திய தூதரக அதிகாரிகள்...!

Sharmi / Mar 13th 2024, 10:34 am
image

யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் உள்ளிட்ட குழுவினர் வடமாகாண ஆளுநரை  நேற்றையதினம் (12) சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வட மாகாணத்தில் காணப்படும் சுற்றுலாத் தளங்களை அபிவிருத்தி செய்வது தொடர்பில் இலங்கைக்கான இந்திய பதில் உயர்ஸ்தானிகர்  கலாநிதி சத்வஞ்சல் பாண்டே  உள்ளிட்ட குழுவினர் வட மாகாண ஆளுநரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இச் சந்திப்பில் யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் செவிதி சாய் முரளியும் கலந்து கொண்டார்.

அதேவேளை குறித்த கலந்துரையாடலில்,  பலாலி விமான நிலைய அபிவிருத்தி, சென்னையிலிருந்து பலாலிக்கான விமான சேவையை அதிகரித்தல், காங்கேசன்துறைக்கும் தூத்துக்குடிக்குமான பயணிகள் கப்பல் சேவை, இயற்கை சக்தி வளங்களை பயன்படுத்தி மின்னுற்பத்தியை மேற்கொள்ளுதல் மற்றும் வடக்கில் முன்னெடுக்கக்கூடிய ஏனைய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும்  இதன்போது கலந்துரையாடப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.




வட மாகாணத்தில் சுற்றுலாத் தளங்கள் அபிவிருத்தி. வடக்கு ஆளுநரை சந்தித்த இந்திய தூதரக அதிகாரிகள். யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் உள்ளிட்ட குழுவினர் வடமாகாண ஆளுநரை  நேற்றையதினம் (12) சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,வட மாகாணத்தில் காணப்படும் சுற்றுலாத் தளங்களை அபிவிருத்தி செய்வது தொடர்பில் இலங்கைக்கான இந்திய பதில் உயர்ஸ்தானிகர்  கலாநிதி சத்வஞ்சல் பாண்டே  உள்ளிட்ட குழுவினர் வட மாகாண ஆளுநரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.இச் சந்திப்பில் யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் செவிதி சாய் முரளியும் கலந்து கொண்டார்.அதேவேளை குறித்த கலந்துரையாடலில்,  பலாலி விமான நிலைய அபிவிருத்தி, சென்னையிலிருந்து பலாலிக்கான விமான சேவையை அதிகரித்தல், காங்கேசன்துறைக்கும் தூத்துக்குடிக்குமான பயணிகள் கப்பல் சேவை, இயற்கை சக்தி வளங்களை பயன்படுத்தி மின்னுற்பத்தியை மேற்கொள்ளுதல் மற்றும் வடக்கில் முன்னெடுக்கக்கூடிய ஏனைய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும்  இதன்போது கலந்துரையாடப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement