• Apr 21 2026

டீசல் விலை 600 ரூபாய் வரை அதிகரிக்கலாம்! கடன் செலுத்தும் காலத்தை நீடிக்குமாறு தயாசிறி கோரிக்கை

Chithra / Mar 19th 2026, 12:27 pm
image


இலங்கையில் டீசல் விலை ஒரு லீட்டருக்கு 550 முதல் 600 ரூபாய் வரை அதிகரிக்கக்கூடும் என  நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர எச்சரிக்கை விடுத்துள்ளார்.


ஏப்ரல் மாதம் வரவிருக்கும் எரிபொருள் கப்பலின் விலையை அடிப்படையாகக் கொண்டு அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.


எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ள டீசல் கப்பலின் விலை மிக அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், இதன் காரணமாக உள்ளூர் சந்தையில் டீசல் விலை தவிர்க்க முடியாதபடி பெரும் உயர்வைச் சந்திக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


தற்போதைய எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மீண்டும் வரிசைகள் உருவாகியுள்ளமைக்கு அரசாங்கத்தின் முறையற்ற நிர்வாகமே காரணம் என அவர் குற்றம்சுமத்தியுள்ளார்.


எரிபொருள் கொள்வனவுக்கான நடவடிக்கைகளை உரிய காலத்திலும், முறையான திட்டமிடலுடனும் முன்னெடுக்க அரசாங்கம் தவறியுள்ளமையே இந்த நெருக்கடிக்கு வழிவகுத்துள்ளதாக தயாசிறி ஜயசேகர மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். 


அத்துடன் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் கடன்களை செலுத்துவதற்காக ஒவ்வொரு லீற்றர் எரிபொருளிலிருந்தும் 50 ரூபாய் அறவிடப்படுகிறது. 


கூட்டுத்தாபனத்தின் கடன்கள் மறுசீரமைக்கப்பட்டால், இந்த வரி அறவீட்டைத் தற்காலிகமாகத் தளர்த்த முடியும்.


எரிபொருள் விலையினால் மக்கள் எதிர்நோக்கும் சுமையைக் குறைக்க வேண்டுமானால், கடன் மீள் செலுத்தும் காலத்தை நீடிக்க வேண்டும்.


இதன்மூலம் தற்போதைய வரியைக் குறைத்து மக்களுக்கு நிவாரணத்தை வழங்க முடியும் என தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.


டீசல் விலை 600 ரூபாய் வரை அதிகரிக்கலாம் கடன் செலுத்தும் காலத்தை நீடிக்குமாறு தயாசிறி கோரிக்கை இலங்கையில் டீசல் விலை ஒரு லீட்டருக்கு 550 முதல் 600 ரூபாய் வரை அதிகரிக்கக்கூடும் என  நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர எச்சரிக்கை விடுத்துள்ளார்.ஏப்ரல் மாதம் வரவிருக்கும் எரிபொருள் கப்பலின் விலையை அடிப்படையாகக் கொண்டு அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ள டீசல் கப்பலின் விலை மிக அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், இதன் காரணமாக உள்ளூர் சந்தையில் டீசல் விலை தவிர்க்க முடியாதபடி பெரும் உயர்வைச் சந்திக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.தற்போதைய எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மீண்டும் வரிசைகள் உருவாகியுள்ளமைக்கு அரசாங்கத்தின் முறையற்ற நிர்வாகமே காரணம் என அவர் குற்றம்சுமத்தியுள்ளார்.எரிபொருள் கொள்வனவுக்கான நடவடிக்கைகளை உரிய காலத்திலும், முறையான திட்டமிடலுடனும் முன்னெடுக்க அரசாங்கம் தவறியுள்ளமையே இந்த நெருக்கடிக்கு வழிவகுத்துள்ளதாக தயாசிறி ஜயசேகர மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் கடன்களை செலுத்துவதற்காக ஒவ்வொரு லீற்றர் எரிபொருளிலிருந்தும் 50 ரூபாய் அறவிடப்படுகிறது. கூட்டுத்தாபனத்தின் கடன்கள் மறுசீரமைக்கப்பட்டால், இந்த வரி அறவீட்டைத் தற்காலிகமாகத் தளர்த்த முடியும்.எரிபொருள் விலையினால் மக்கள் எதிர்நோக்கும் சுமையைக் குறைக்க வேண்டுமானால், கடன் மீள் செலுத்தும் காலத்தை நீடிக்க வேண்டும்.இதன்மூலம் தற்போதைய வரியைக் குறைத்து மக்களுக்கு நிவாரணத்தை வழங்க முடியும் என தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement