ஹோமாகம பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள மதுபானசாலையை ஒரு வாரத்திற்குள் அகற்றாவிட்டால் கடும் தீர்மானம் எடுப்பதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அமைச்சர் பதவிகளை விடவும், ஹோமாகம மக்களின் கெளரவமே தனக்குப் பெறுமதியானது என அவர் தெரிவித்துள்ளார்.
ஹோமாகம பிடிபன பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மதுபானசாலை திறப்புக்கு எதிராகவும் குடிநீர் நிலையங்களை திறக்கக் கோரியும் நடைபெற்ற சத்தியாக்கிரக போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நீண்ட காலமாக ஹோமாகம நகரை அண்மித்த பகுதியில் குடிநீர் நிலையங்களை ஆரம்பிக்க சந்தர்ப்பம் வழங்கப்படாமல் ஹோமாகம பிரதேச செயலாளர் தன்னிச்சையாக செயற்பட்டுள்ளதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
எனக்கு கௌரவம் தான் முக்கியம்; அமைச்சுப் பதவியையும் இராஜினாமா செய்யத் தயார் பந்துல அறிவிப்பு ஹோமாகம பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள மதுபானசாலையை ஒரு வாரத்திற்குள் அகற்றாவிட்டால் கடும் தீர்மானம் எடுப்பதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.அமைச்சர் பதவிகளை விடவும், ஹோமாகம மக்களின் கெளரவமே தனக்குப் பெறுமதியானது என அவர் தெரிவித்துள்ளார்.ஹோமாகம பிடிபன பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மதுபானசாலை திறப்புக்கு எதிராகவும் குடிநீர் நிலையங்களை திறக்கக் கோரியும் நடைபெற்ற சத்தியாக்கிரக போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.நீண்ட காலமாக ஹோமாகம நகரை அண்மித்த பகுதியில் குடிநீர் நிலையங்களை ஆரம்பிக்க சந்தர்ப்பம் வழங்கப்படாமல் ஹோமாகம பிரதேச செயலாளர் தன்னிச்சையாக செயற்பட்டுள்ளதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.