• Apr 28 2024

67 தரமற்ற மருந்துகள் கண்டுபிடிப்பு! SamugamMedia

Chithra / Feb 23rd 2023, 7:59 am
image

Advertisement

மருந்து உற்பத்தி நிறுவனங்கள், விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 67 மருந்துகள் தரமற்றவையாக இருந்ததாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

அவற்றில் பெரும்பாலானவை ஹிமாசல பிரதேசம், உத்தரகண்ட், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களில் தயாரிக்கப்பட்டவை. நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து – மாத்திரைகளும் மத்திய, மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்படுகின்றன. 

அதேபோல், போலி மருந்துகளும் கண்டறியப்பட்டு, அதன்பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

அதன்படி, கடந்த மாதத்தில் மட்டும் 1,348 மருந்துகள் ஆய்வுக்குள்படுத்தப்பட்டன. அவற்றில் காய்ச்சல், சளி, கால்சியம், இரும்புச் சத்து, உயா் ரத்த அழுத்தம், ஜீரண மண்டல பாதிப்புக்கு பயன்படுத்தப்படும் 67 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டது.

இதையடுத்து அதன் விவரங்களை மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியத்தின் cdsco.gov.in என்ற இணையப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருந்து கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

67 தரமற்ற மருந்துகள் கண்டுபிடிப்பு SamugamMedia மருந்து உற்பத்தி நிறுவனங்கள், விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 67 மருந்துகள் தரமற்றவையாக இருந்ததாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.அவற்றில் பெரும்பாலானவை ஹிமாசல பிரதேசம், உத்தரகண்ட், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களில் தயாரிக்கப்பட்டவை. நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து – மாத்திரைகளும் மத்திய, மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்படுகின்றன. அதேபோல், போலி மருந்துகளும் கண்டறியப்பட்டு, அதன்பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.அதன்படி, கடந்த மாதத்தில் மட்டும் 1,348 மருந்துகள் ஆய்வுக்குள்படுத்தப்பட்டன. அவற்றில் காய்ச்சல், சளி, கால்சியம், இரும்புச் சத்து, உயா் ரத்த அழுத்தம், ஜீரண மண்டல பாதிப்புக்கு பயன்படுத்தப்படும் 67 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டது.இதையடுத்து அதன் விவரங்களை மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியத்தின் cdsco.gov.in என்ற இணையப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருந்து கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

Advertisement

Advertisement

Advertisement