மட்டக்களப்பு மாவட்டத்தில் தபால் மூல வாக்குச் சீட்டுக்களை விநியோகிக்கும் உதவி தெரிவத்தாட்சி அலுவலர்கள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கான கலந்துரையாடலானது மாவட்ட மேலதிக அரச அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த் தலைமையில் உதவித் தேர்தல்கள் ஆணையளர் எம்.பி.எம் சுபியான் ஏற்பாட்டில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (04) இடம் பெற்றது.
2025 உள்ளூர் அதிகாரசபை தேர்தலிற்கான தபால் மூல வாக்களிப்பு ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதனால் தேர்தலுக்கான தபால்மூல வாக்குச் சீட்டுக்களை விநியோகிக்கும் அலுவலர்களுக்கான தெளிவூட்டும் செயலமர்வு இடம் பெற்றன.
தேர்தல் கடமையில் ஈடுபடும் அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னாயத்த விடயங்கள் தொடர்பாக இதன் போது விரிவாக தெளிவூட்டப்பட்டது.
இம் முறை இருபது விநியோகிக்கும் நிலையங்கள் மூலம் தபால் மூல வாக்குச் சீட்டுக்கள் வழங்கப்படவுள்ளதுடன், தபால் மூல வாக்குச் சீட்டுக்களை எண்ணும் பணி மண்முனை வடக்கு பிரதேச செயலத்தில் இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
தபால்மூல வாக்குச் சீட்டுக்களை விநியோகிக்கும் உதவி தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கான கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்டத்தில் தபால் மூல வாக்குச் சீட்டுக்களை விநியோகிக்கும் உதவி தெரிவத்தாட்சி அலுவலர்கள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கான கலந்துரையாடலானது மாவட்ட மேலதிக அரச அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த் தலைமையில் உதவித் தேர்தல்கள் ஆணையளர் எம்.பி.எம் சுபியான் ஏற்பாட்டில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (04) இடம் பெற்றது.2025 உள்ளூர் அதிகாரசபை தேர்தலிற்கான தபால் மூல வாக்களிப்பு ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதனால் தேர்தலுக்கான தபால்மூல வாக்குச் சீட்டுக்களை விநியோகிக்கும் அலுவலர்களுக்கான தெளிவூட்டும் செயலமர்வு இடம் பெற்றன.தேர்தல் கடமையில் ஈடுபடும் அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னாயத்த விடயங்கள் தொடர்பாக இதன் போது விரிவாக தெளிவூட்டப்பட்டது.இம் முறை இருபது விநியோகிக்கும் நிலையங்கள் மூலம் தபால் மூல வாக்குச் சீட்டுக்கள் வழங்கப்படவுள்ளதுடன், தபால் மூல வாக்குச் சீட்டுக்களை எண்ணும் பணி மண்முனை வடக்கு பிரதேச செயலத்தில் இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.