இலங்கையில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பு சார்பில் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவர் களமிறக்கப்படுவது தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் புதிய பாராளுமன்றத்தில் கலந்துரையாடப்படவுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் புதிய பாராளுமன்றத்தில் சபாநாயகர் கலையழகன் கார்திகேசு தலைமையில் எதிர்வரும் முதலாம் திகதி 'பொதுவேட்பாளர்' தொடர்பில் கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் பொது வேட்பாளர் பற்றிய கலந்துரையாடலை பொதுமக்கள் நேரலையாக பார்வையிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், அந்தவகையில் எதிர்வரும் 01 ஆம் திகதி சனிக்கிழமை நியுயோக் நேரம் மாலை 4:00 - 6:00 வரை சூம் இணைப்பின் ஊடாக பார்வையிடமுடியும் என தெரிவிக்கப்படுகிறது.
தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்றத்தில் கலந்துரையாடல். இலங்கையில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பு சார்பில் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவர் களமிறக்கப்படுவது தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் புதிய பாராளுமன்றத்தில் கலந்துரையாடப்படவுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் புதிய பாராளுமன்றத்தில் சபாநாயகர் கலையழகன் கார்திகேசு தலைமையில் எதிர்வரும் முதலாம் திகதி 'பொதுவேட்பாளர்' தொடர்பில் கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.இந்நிலையில் பொது வேட்பாளர் பற்றிய கலந்துரையாடலை பொதுமக்கள் நேரலையாக பார்வையிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.அந்தவகையில், அந்தவகையில் எதிர்வரும் 01 ஆம் திகதி சனிக்கிழமை நியுயோக் நேரம் மாலை 4:00 - 6:00 வரை சூம் இணைப்பின் ஊடாக பார்வையிடமுடியும் என தெரிவிக்கப்படுகிறது.