• May 11 2024

திருமலையில் இடம்பெற்ற ஜனநாயக பங்குதாரர்களுடனான கலந்துரையாடலும் மக்கள் குறைகேள் களமும்...!samugammedia

Sharmi / Nov 22nd 2023, 12:20 pm
image

Advertisement

ஜனநாயக பங்குதாரர்களுடனான கலந்துரையாடலும்,  மக்கள் குறைகேள் களம் இன்றையதினம் (22) திருகோணமலை குச்சவெளி பிரதேச சபை ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.

AHRC நிறுவனம் ஜனநாயக பங்குதாரர்களை ஒன்றிணைக்கும் செயற்திட்டத்தின்கீழ் பிரதேச சபைகள், சிவில் அமைப்புக்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோரை 45 நாட்களுக்கு ஒருமுறை ஒன்றிணைப்பதன் ஊடாக சமுகத்தில் இனம்காணப்படும் பிரச்சினைகளை வெளிப்படுத்தி தீர்வுகளை முன்மொழிந்தும் மற்றும் பிரதேச சபையின் செயற்பாடுகளை மக்களுக்கு தெரியப்படுத்தி வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்பு கூறலை ஏற்படுத்துதலை நோக்கமாகக் கொண்டு இச்செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இதன் அடிப்படையில் குச்சவெளி பிரதேச சபை உத்தியோஸ்தர்கள், பிரதேச சிவில் அமைப்புக்கள், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். 

இக்கலந்துரையாடலின்போது மக்கள் எதிர்நோக்கும் பலதரப்பட்ட பிரச்சினைகள் முன்மொழியப்பட்டிருந்தன.

குறிப்பாக  தற்போது நிலவிவருகின்ற மழையுடன்கூடிய காலநிலை தொடர்பாகவும் வடிகான்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டன.

இக் கலந்துரையாடலில் AHRC நிறுவனத்தின் திட்ட இணைப்பாளர் த.தனுஸ்குமார் மற்றும் கள இணைப்பாளர் என்.இஸ்மியா ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.



திருமலையில் இடம்பெற்ற ஜனநாயக பங்குதாரர்களுடனான கலந்துரையாடலும் மக்கள் குறைகேள் களமும்.samugammedia ஜனநாயக பங்குதாரர்களுடனான கலந்துரையாடலும்,  மக்கள் குறைகேள் களம் இன்றையதினம் (22) திருகோணமலை குச்சவெளி பிரதேச சபை ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.AHRC நிறுவனம் ஜனநாயக பங்குதாரர்களை ஒன்றிணைக்கும் செயற்திட்டத்தின்கீழ் பிரதேச சபைகள், சிவில் அமைப்புக்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோரை 45 நாட்களுக்கு ஒருமுறை ஒன்றிணைப்பதன் ஊடாக சமுகத்தில் இனம்காணப்படும் பிரச்சினைகளை வெளிப்படுத்தி தீர்வுகளை முன்மொழிந்தும் மற்றும் பிரதேச சபையின் செயற்பாடுகளை மக்களுக்கு தெரியப்படுத்தி வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்பு கூறலை ஏற்படுத்துதலை நோக்கமாகக் கொண்டு இச்செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.இதன் அடிப்படையில் குச்சவெளி பிரதேச சபை உத்தியோஸ்தர்கள், பிரதேச சிவில் அமைப்புக்கள், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இக்கலந்துரையாடலின்போது மக்கள் எதிர்நோக்கும் பலதரப்பட்ட பிரச்சினைகள் முன்மொழியப்பட்டிருந்தன. குறிப்பாக  தற்போது நிலவிவருகின்ற மழையுடன்கூடிய காலநிலை தொடர்பாகவும் வடிகான்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டன.இக் கலந்துரையாடலில் AHRC நிறுவனத்தின் திட்ட இணைப்பாளர் த.தனுஸ்குமார் மற்றும் கள இணைப்பாளர் என்.இஸ்மியா ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement