• Apr 26 2024

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பில் அரசியல் கட்சிகளுடனான கலந்துரையால்! SamugamMedia

Tamil nila / Mar 21st 2023, 8:16 am
image

Advertisement

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பில் அரசியல் கட்சிகளுடனான கலந்துரையாடலின் பின்னர் தீர்மானிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


அதன் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி புஞ்சிஹேவா, தற்போதைய நிலவரத்தை கருத்திற் கொண்டு தேர்தலை திட்டமிட்ட திகதியில் நடத்துவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.


உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான தபால் மூல வாக்குகளை அடையாளப்படுத்தும் நடவடிக்கைகள் மார்ச் மாதம் 28 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதோடு, ஏப்ரல் 25 ஆம் திகதி தேர்தலுக்கான திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


எவ்வாறாயினும், குறித்த திகதியில் தபால் மூல வாக்குகளை வழங்க முடியாது என அரசாங்க ஊடகங்கள் தெரிவித்திருப்பதால், அந்தந்த திகதிகளில் தேர்தலை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.


அதன்படி, இது குறித்து ஆலோசிக்க வரும் 23ம் திகதி அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் தேர்தல் ஆணையத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.


உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் இறுதி இணக்கப்பாட்டுக்கு வருமென நம்புவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஜி.புஞ்சிஹேவா தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பில் அரசியல் கட்சிகளுடனான கலந்துரையால் SamugamMedia உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பில் அரசியல் கட்சிகளுடனான கலந்துரையாடலின் பின்னர் தீர்மானிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.அதன் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி புஞ்சிஹேவா, தற்போதைய நிலவரத்தை கருத்திற் கொண்டு தேர்தலை திட்டமிட்ட திகதியில் நடத்துவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான தபால் மூல வாக்குகளை அடையாளப்படுத்தும் நடவடிக்கைகள் மார்ச் மாதம் 28 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதோடு, ஏப்ரல் 25 ஆம் திகதி தேர்தலுக்கான திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.எவ்வாறாயினும், குறித்த திகதியில் தபால் மூல வாக்குகளை வழங்க முடியாது என அரசாங்க ஊடகங்கள் தெரிவித்திருப்பதால், அந்தந்த திகதிகளில் தேர்தலை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.அதன்படி, இது குறித்து ஆலோசிக்க வரும் 23ம் திகதி அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் தேர்தல் ஆணையத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் இறுதி இணக்கப்பாட்டுக்கு வருமென நம்புவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஜி.புஞ்சிஹேவா தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement