• Nov 26 2024

இலங்கையிலல் கால்நடைகளிடையே பரவும் நோய்..! மனிதர்களுக்கும் பாதிப்பா..?

Chithra / May 23rd 2024, 9:54 am
image

 

நுவரெலியா மாவட்டத்தில் கால்நடைகளுக்கு, லைசர்ஜிக் அமிலம் டைதிலாமைடு (LSD) என்ற தோல் நோய் பரவி வருவதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நோயை கட்டுப்படுத்துவதற்கு தேவையான தடுப்பூசிகளை வழங்கும் கூட்டு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஹேமலி கொத்தலாவல தெரிவித்துள்ளார்.

அத்தோடு, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்திலுள்ள கால்நடைகளுக்கும் இந்த நோய் பரவியிருந்த நிலையில், 

தடுப்பூசி போடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதால் அதனை கட்டுப்படுத்த முடிந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


மேலும் இந்த நோயைக் கட்டுப்படுத்துவற்கு தற்போது கிடைக்கப்பெறும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை போதுமாக இல்லை என்பதால், 

அவசர கால கொள்வனவின் கீழ் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என  விவசாய அமைச்சின் செயலாளர் ஜானக தர்மகீர்த்தி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த நோய்த் தாக்கத்துக்கு உள்ளாகியுள்ள கால்நடைகளின் பால் மற்றும் இறைச்சியை உட்கொள்வதனால் மனிதர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என வைத்தியர் ஹேமலி கொத்தலாவல தெரிவித்துள்ளார்.

ஆகவே, இந்த நோய் தொடர்பில் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும், 

நோய் தாக்குத்துக்கு உள்ளான கால்நடைகளிடமிருந்து மனிதர்களுக்கு LSD பரவும் அபாயம் இல்லை என வைத்தியர் ஹேமலி கொத்தலாவல  தெரிவித்துள்ளார்.

இருப்பினும் கடந்த ஆறு மாத காலத்துக்குள் மத்திய மாகாணத்தில் 135 கால்நடைகள் அம்மை நோய் காரணமாக உயிரிழந்துள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கையிலல் கால்நடைகளிடையே பரவும் நோய். மனிதர்களுக்கும் பாதிப்பா.  நுவரெலியா மாவட்டத்தில் கால்நடைகளுக்கு, லைசர்ஜிக் அமிலம் டைதிலாமைடு (LSD) என்ற தோல் நோய் பரவி வருவதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.இந்த நோயை கட்டுப்படுத்துவதற்கு தேவையான தடுப்பூசிகளை வழங்கும் கூட்டு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஹேமலி கொத்தலாவல தெரிவித்துள்ளார்.அத்தோடு, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்திலுள்ள கால்நடைகளுக்கும் இந்த நோய் பரவியிருந்த நிலையில், தடுப்பூசி போடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதால் அதனை கட்டுப்படுத்த முடிந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.மேலும் இந்த நோயைக் கட்டுப்படுத்துவற்கு தற்போது கிடைக்கப்பெறும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை போதுமாக இல்லை என்பதால், அவசர கால கொள்வனவின் கீழ் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என  விவசாய அமைச்சின் செயலாளர் ஜானக தர்மகீர்த்தி தெரிவித்துள்ளார்.இதேவேளை, இந்த நோய்த் தாக்கத்துக்கு உள்ளாகியுள்ள கால்நடைகளின் பால் மற்றும் இறைச்சியை உட்கொள்வதனால் மனிதர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என வைத்தியர் ஹேமலி கொத்தலாவல தெரிவித்துள்ளார்.ஆகவே, இந்த நோய் தொடர்பில் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும், நோய் தாக்குத்துக்கு உள்ளான கால்நடைகளிடமிருந்து மனிதர்களுக்கு LSD பரவும் அபாயம் இல்லை என வைத்தியர் ஹேமலி கொத்தலாவல  தெரிவித்துள்ளார்.இருப்பினும் கடந்த ஆறு மாத காலத்துக்குள் மத்திய மாகாணத்தில் 135 கால்நடைகள் அம்மை நோய் காரணமாக உயிரிழந்துள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement