• Dec 14 2024

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தால் வவுணதீவில் உலருணவுப் பொதிகள் வழங்கல்!

Tharmini / Dec 14th 2024, 1:25 pm
image

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் வறுமைக் கோட்டுக்குக்கீழ் வாழுகின்ற மக்களுக்கு உலருணவுப் பொதிகளை வழங்கும் அற்றார் அழி பசி தீர்த்தல் என்ற திட்டத்தை கொரோனாப் பேரிடர் ஏற்பட்ட காலத்திலிருந்து முன்னெடுத்து வருகிறது.

இத்திட்டத்தின் தொடர்ச்சியாகக் கடந்த புதன்கிழமை மட்டக்களப்பு வவுணதீவுப் பகுதியில் தெரிவுசெய்யப்பட்ட கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உலருணவுப் பொதிகளை வழங்கியுள்ளது.

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் இ. சூரியகுமார், சூழல் பாதுகாப்பு அணியின் துணைச் செயலாளர் த.யுகேஸ் ஆகியோர் கர்ப்பிணித் தாய்மார்களிடம் உலருணவுப் பொதிகளை வழங்கி வைத்துள்ளனர். 

வவுணதீவில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட பாலக்காடு, ஈச்சந்தீவு, சொருவமுனை, இறக்கத்துமுனை, கரவெட்டி ஆகிய பகுதிகளிலிருந்து குடும்பநல உதவியாளர்களினால் அடையாளங் காணப்பட்ட கர்ப்பிணித் தாய்மார்களுக்கே உலருணவுப் பொதிகள் வழங்கப்பட்டுள்ளன.



தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தால் வவுணதீவில் உலருணவுப் பொதிகள் வழங்கல் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் வறுமைக் கோட்டுக்குக்கீழ் வாழுகின்ற மக்களுக்கு உலருணவுப் பொதிகளை வழங்கும் அற்றார் அழி பசி தீர்த்தல் என்ற திட்டத்தை கொரோனாப் பேரிடர் ஏற்பட்ட காலத்திலிருந்து முன்னெடுத்து வருகிறது. இத்திட்டத்தின் தொடர்ச்சியாகக் கடந்த புதன்கிழமை மட்டக்களப்பு வவுணதீவுப் பகுதியில் தெரிவுசெய்யப்பட்ட கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உலருணவுப் பொதிகளை வழங்கியுள்ளது.தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் இ. சூரியகுமார், சூழல் பாதுகாப்பு அணியின் துணைச் செயலாளர் த.யுகேஸ் ஆகியோர் கர்ப்பிணித் தாய்மார்களிடம் உலருணவுப் பொதிகளை வழங்கி வைத்துள்ளனர். வவுணதீவில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட பாலக்காடு, ஈச்சந்தீவு, சொருவமுனை, இறக்கத்துமுனை, கரவெட்டி ஆகிய பகுதிகளிலிருந்து குடும்பநல உதவியாளர்களினால் அடையாளங் காணப்பட்ட கர்ப்பிணித் தாய்மார்களுக்கே உலருணவுப் பொதிகள் வழங்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement