• May 18 2024

இந்தியா - காங்கேசன்துறை கப்பல் சேவை எப்போது தெரியுமா? வெளியானது அறிவிப்பு

Chithra / Jan 1st 2023, 9:59 am
image

Advertisement

இந்தியாவுக்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவைவைய எதிர்வரும் மார்ச் மாதத்திலிருந்து ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அது தொடர்பில் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு வழங்கப்பட்டுள்ள பணிப்புரைக்கைமய அதற்கான பூர்வாங்க பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டு மாநில அரசாங்கத்துடன் அது தொடர்பில் ஏற்கனேவ பேச்சுவார்த்தைகள் இராஜதந்திர மட்டத்தில் நடைபெற்று வருவதுடன் அது தொடர்பில் சாத்தியமான முன்னேற்றம் காணப்பட்டுள்ளதையடுத்து எதிர்வரும் மார்ச் மாதத்தில் இந்த படகு சேவையை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இரண்டு நாடுகளுக்குமிடையிலான பயணிகள் படகு சேவையை நடத்தும்போது பழைமை வாய்ந்த இராமர் பால பாதையை உபயோகிப்பதா? அல்லது சங்கமித்திரை இலங்கைக்கு வருகை தந்த போது உபயோகப்படுத்தப்பட்ட பாதையை பயன்படுத்துவதா? என்பது தொடர்பிலான பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மேற்படி கப்பல் சேவையை ஆரம்பித்ததன் பின்னர் காங்கேசன்துறை அல்லது மன்னாரில் குடிவரவு குடியகல்வு நிலையம் ஒன்றை ஸ்தாபித்தல் மற்றும் சுங்க அலுவலகத்தை ஸ்தாபித்தல் அத்துடன் துறைமுக அதிகார சபையின் மத்திய நிலையம் ஒன்றை ஸ்தாபித்தல் போன்ற விடயங்கள் தொடர்பில் அதிபரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கும் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகளுக்குமிடையில் இந்த வருடத்தின் முதல் பகுதியிலேயே பேச்சுவார்த்தையொன்று நடைபெறவுள்ளது. 

இந்தியா - காங்கேசன்துறை கப்பல் சேவை எப்போது தெரியுமா வெளியானது அறிவிப்பு இந்தியாவுக்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவைவைய எதிர்வரும் மார்ச் மாதத்திலிருந்து ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அது தொடர்பில் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு வழங்கப்பட்டுள்ள பணிப்புரைக்கைமய அதற்கான பூர்வாங்க பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.தமிழ்நாட்டு மாநில அரசாங்கத்துடன் அது தொடர்பில் ஏற்கனேவ பேச்சுவார்த்தைகள் இராஜதந்திர மட்டத்தில் நடைபெற்று வருவதுடன் அது தொடர்பில் சாத்தியமான முன்னேற்றம் காணப்பட்டுள்ளதையடுத்து எதிர்வரும் மார்ச் மாதத்தில் இந்த படகு சேவையை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.இரண்டு நாடுகளுக்குமிடையிலான பயணிகள் படகு சேவையை நடத்தும்போது பழைமை வாய்ந்த இராமர் பால பாதையை உபயோகிப்பதா அல்லது சங்கமித்திரை இலங்கைக்கு வருகை தந்த போது உபயோகப்படுத்தப்பட்ட பாதையை பயன்படுத்துவதா என்பது தொடர்பிலான பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.மேற்படி கப்பல் சேவையை ஆரம்பித்ததன் பின்னர் காங்கேசன்துறை அல்லது மன்னாரில் குடிவரவு குடியகல்வு நிலையம் ஒன்றை ஸ்தாபித்தல் மற்றும் சுங்க அலுவலகத்தை ஸ்தாபித்தல் அத்துடன் துறைமுக அதிகார சபையின் மத்திய நிலையம் ஒன்றை ஸ்தாபித்தல் போன்ற விடயங்கள் தொடர்பில் அதிபரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கும் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகளுக்குமிடையில் இந்த வருடத்தின் முதல் பகுதியிலேயே பேச்சுவார்த்தையொன்று நடைபெறவுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement