அரசியல் செயற்பாட்டாளர் டான் பிரியசாத் நேற்றையதினம் இரவு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டபோது ஆபத்தான நிலையில் இருந்ததாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் துணை இயக்குநர் வைத்தியர் ருக்ஷன் பெல்லன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் இன்று(23) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
டான் பிரியசாத் வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டபோது ஆபத்தான நிலையில் இருந்த அதேவேளை அவரது மார்பு மற்றும் தோள்பட்டையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருந்தது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த டான் பிரியசாத் நேற்று(22) இரவு 9.20 மணியளவில் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அதன் பிறகு மருத்துவ ஊழியர்கள் அவரது உயிரைக் காப்பாற்ற பல முயற்சிகளை மேற்கொண்டனர்.
ஆனால் அந்த முயற்சி பலனளிக்காத நிலையில் டேன் பிரியசாத் நேற்றையதினம் இரவு 11.20 மணியளவில் காலமானார் எனவும் தெரிவித்தார்.
டான் பிரியசாத் மரணம்: கொழும்பு வைத்தியசாலை வெளியிட்ட அதிர்ச்சி தகவல். அரசியல் செயற்பாட்டாளர் டான் பிரியசாத் நேற்றையதினம் இரவு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டபோது ஆபத்தான நிலையில் இருந்ததாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் துணை இயக்குநர் வைத்தியர் ருக்ஷன் பெல்லன தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் இன்று(23) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்தார்.இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,டான் பிரியசாத் வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டபோது ஆபத்தான நிலையில் இருந்த அதேவேளை அவரது மார்பு மற்றும் தோள்பட்டையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருந்தது.துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த டான் பிரியசாத் நேற்று(22) இரவு 9.20 மணியளவில் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அதன் பிறகு மருத்துவ ஊழியர்கள் அவரது உயிரைக் காப்பாற்ற பல முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால் அந்த முயற்சி பலனளிக்காத நிலையில் டேன் பிரியசாத் நேற்றையதினம் இரவு 11.20 மணியளவில் காலமானார் எனவும் தெரிவித்தார்.