பௌத்த சமயமானது இலங்கை கொண்டு வரப்பட்ட பொசன் தினத்தை முன்னிட்டு வவுனியா
பொலிசாரால் பல்வேறு இடங்களில் மக்களுக்கு தானம் வழங்கும் நிகழ்வு இன்று(3) முன்னெடுக்கப்பட்டது.
வவுனியாவின் பிரதான தானம் வழங்கும்
நிகழ்வை வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயம் முன்பாக ஏ9 வீதியில்
வவுனியா மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஆரம்பித்து வைத்தார். இதன்போது
மக்களின் தாகத்தை தீர்க்க குடிபானம் தானம் வழங்கப்பட்டது.
வவுனியா
பொலிஸ் களஞ்சியசாலை முன்பாக இடம்பெற்ற நிகழ்வில் வீதியால் சென்ற மக்களுக்கு
மரவள்ளிக் கிழக்கு தானமாக வழங்கப்பட்டது.
தொடர்ந்து வவுனியா தலைமைப்
பொலிஸ் நிலையம் முன்பாக வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி
தலைமையில் 2000 பேருக்கு சமைத்த உணவும் வழங்கப்பட்டது.
குறித்த
நிகழ்வுகளில் மதத்தலைவர்கள், பிரதி பொலிஸ் மா அதிபர், பொலிஸ் அதிகாரிகள்,
சிவில் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள், சமுதாய பொலிஸ் குழு உறுப்பினர்கள்,
கிராம அலுவலர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து
கொண்டனர்.
பொசன் தினத்தை முன்னிட்டு வவுனியா பொலிசாரால் தானம் வழங்கி வைப்பு.samugammedia பௌத்த சமயமானது இலங்கை கொண்டு வரப்பட்ட பொசன் தினத்தை முன்னிட்டு வவுனியா
பொலிசாரால் பல்வேறு இடங்களில் மக்களுக்கு தானம் வழங்கும் நிகழ்வு இன்று(3) முன்னெடுக்கப்பட்டது.வவுனியாவின் பிரதான தானம் வழங்கும்
நிகழ்வை வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயம் முன்பாக ஏ9 வீதியில்
வவுனியா மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஆரம்பித்து வைத்தார். இதன்போது
மக்களின் தாகத்தை தீர்க்க குடிபானம் தானம் வழங்கப்பட்டது. வவுனியா
பொலிஸ் களஞ்சியசாலை முன்பாக இடம்பெற்ற நிகழ்வில் வீதியால் சென்ற மக்களுக்கு
மரவள்ளிக் கிழக்கு தானமாக வழங்கப்பட்டது. தொடர்ந்து வவுனியா தலைமைப்
பொலிஸ் நிலையம் முன்பாக வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி
தலைமையில் 2000 பேருக்கு சமைத்த உணவும் வழங்கப்பட்டது.குறித்த