• May 02 2024

கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம்! வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

Chithra / Jan 31st 2023, 8:47 am
image

Advertisement

வங்காளவிரிகுடாவின் தென் கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் நாளை(01) கிழக்கு கடற்பிராந்தியத்தை அண்மிக்கவுள்ளமை காரணமாக நாட்டின் பல பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

கிழக்கு, மத்திய, ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை பெய்வதுடன் சில பகுதிகளில் 150 மில்லிமீட்டர் வரை மழை வீழ்ச்சி பதிவாக்கூடும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் இன்று(31) கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

பொத்துவில் தொடக்கம் திருகோணமலை, காங்கேசன்துறை முதல் மன்னார் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 60 கிலோமீட்டர் வரை அதிகரித்து வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை வங்காளவிரிகுடாவின் தென் கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் நாளை(01) கிழக்கு கடற்பிராந்தியத்தை அண்மிக்கவுள்ளமை காரணமாக நாட்டின் பல பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.கிழக்கு, மத்திய, ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை பெய்வதுடன் சில பகுதிகளில் 150 மில்லிமீட்டர் வரை மழை வீழ்ச்சி பதிவாக்கூடும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.நாட்டைச் சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் இன்று(31) கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.பொத்துவில் தொடக்கம் திருகோணமலை, காங்கேசன்துறை முதல் மன்னார் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 60 கிலோமீட்டர் வரை அதிகரித்து வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement