• Sep 17 2024

அவசர அவசரமாக தீர்மானத்தை எடுக்கக் கூடாது – 13 தொடர்பில் ஆளும்கட்சி!

Chithra / Feb 6th 2023, 10:07 am
image

Advertisement

சர்ச்சைக்குரிய 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கான தீர்மானத்தை அவசர அவசரமாக எடுக்கக் கூடாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

அதிகாரப் பகிர்வை நிச்சயமாக எதிர்க்கவில்லை என்றாலும் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடிய நிகழ்ச்சி நிரலுக்கு எக்காரணம் கொண்டும் ஆதரவளிக்க முடியாது என கூறியுள்ளது.

13 ஆவது திருத்தம் குறித்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கடந்த 7 ஜனாதிபதிளும் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்குவதை ஏன் தவிர்த்தார்கள் என்பதை முதலில் ஆராய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம் மொழி மற்றும் மதத்தின் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்பட்டால், மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

அவசர அவசரமாக தீர்மானத்தை எடுக்கக் கூடாது – 13 தொடர்பில் ஆளும்கட்சி சர்ச்சைக்குரிய 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கான தீர்மானத்தை அவசர அவசரமாக எடுக்கக் கூடாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.அதிகாரப் பகிர்வை நிச்சயமாக எதிர்க்கவில்லை என்றாலும் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடிய நிகழ்ச்சி நிரலுக்கு எக்காரணம் கொண்டும் ஆதரவளிக்க முடியாது என கூறியுள்ளது.13 ஆவது திருத்தம் குறித்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.கடந்த 7 ஜனாதிபதிளும் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்குவதை ஏன் தவிர்த்தார்கள் என்பதை முதலில் ஆராய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.இதேநேரம் மொழி மற்றும் மதத்தின் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்பட்டால், மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement