• Nov 19 2024

நாடாளுமன்றுக்கு சென்றார் வைத்தியர் அர்ச்சுனா..!

Chithra / Jul 23rd 2024, 3:44 pm
image

 

யாழ்ப்பாணம் - சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகரான அர்ச்சுனா இராமநாதன் இன்று செவ்வாய்க்கிழமை (23) நாடாளுமன்றுக்கு சென்றுள்ளார்.

பாராளுமன்றத்தில் வைத்தியர் அர்ச்சுனா எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுடன் கலந்துரையாடியதோடு, புகைப்படங்கங்களையும் எடுத்துள்ளார்.

இது தொடர்பாக வைத்தியர் வைத்தியர் அர்ச்சுனா தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.

அதில், எனது வாழ்க்கையை எனது மக்களுக்காக அர்ப்பணித்து  வெகு நாட்களாகிறது.

இந்தப் பெரும் சுமையை எனது சின்ன கைகளில் சுமத்தி அழகு பார்க்கும் எனது இனிய தமிழ் மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். 

உங்களுடைய இந்த நம்பிக்கையை இந்த கணத்தில் நான் பிழையான வழியில் அவமதிப்பேன் என்றால் எனது வீரம் செறிந்த தமிழினத்திற்கு மிகப்பெரிய துரோகி நானாகத்தான் இருப்பேன்.

இந்த உன்னதமான பணியை எனக்குத் தந்த எனதருமை தமிழ் சொந்தங்கள் இந்த வீர போராட்டத்திலே தங்களையே ஆகுதியாக்கி கொண்ட அண்ணா மார்கள், அக்கா மார்கள், தம்பிகள், தங்கைகள் அனைவருக்கும் என்னால் செய்யக்கூடிய ஒரே ஒரு நன்றி கடன் இது மட்டுமே. 

எப்போதுமே உங்கள் நம்பிக்கை புதல்வனாக இருந்து மரணிப்பேன் என்று சொல்லிக் கொண்டு இனிவரும் காலங்கள் எமக்கு மிக முக்கியமான காலமாக இருக்கும் என்பதை நான் அறிவேன் என்பதையும் சொல்லிக் கொண்டு எனக்கான மக்களின் போராட்டத்தில் இன்றிலிருந்து நான் முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு விட்டேன் என்பதை சொல்லி இந்தப் பதிவை நான் பதிவிடுகிறேன். 

நாங்கள் மீண்டும் சந்திப்போம் எனத் தெரிவித்துள்ளார்.


நாடாளுமன்றுக்கு சென்றார் வைத்தியர் அர்ச்சுனா.  யாழ்ப்பாணம் - சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகரான அர்ச்சுனா இராமநாதன் இன்று செவ்வாய்க்கிழமை (23) நாடாளுமன்றுக்கு சென்றுள்ளார்.பாராளுமன்றத்தில் வைத்தியர் அர்ச்சுனா எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுடன் கலந்துரையாடியதோடு, புகைப்படங்கங்களையும் எடுத்துள்ளார்.இது தொடர்பாக வைத்தியர் வைத்தியர் அர்ச்சுனா தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.அதில், எனது வாழ்க்கையை எனது மக்களுக்காக அர்ப்பணித்து  வெகு நாட்களாகிறது.இந்தப் பெரும் சுமையை எனது சின்ன கைகளில் சுமத்தி அழகு பார்க்கும் எனது இனிய தமிழ் மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். உங்களுடைய இந்த நம்பிக்கையை இந்த கணத்தில் நான் பிழையான வழியில் அவமதிப்பேன் என்றால் எனது வீரம் செறிந்த தமிழினத்திற்கு மிகப்பெரிய துரோகி நானாகத்தான் இருப்பேன்.இந்த உன்னதமான பணியை எனக்குத் தந்த எனதருமை தமிழ் சொந்தங்கள் இந்த வீர போராட்டத்திலே தங்களையே ஆகுதியாக்கி கொண்ட அண்ணா மார்கள், அக்கா மார்கள், தம்பிகள், தங்கைகள் அனைவருக்கும் என்னால் செய்யக்கூடிய ஒரே ஒரு நன்றி கடன் இது மட்டுமே. எப்போதுமே உங்கள் நம்பிக்கை புதல்வனாக இருந்து மரணிப்பேன் என்று சொல்லிக் கொண்டு இனிவரும் காலங்கள் எமக்கு மிக முக்கியமான காலமாக இருக்கும் என்பதை நான் அறிவேன் என்பதையும் சொல்லிக் கொண்டு எனக்கான மக்களின் போராட்டத்தில் இன்றிலிருந்து நான் முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு விட்டேன் என்பதை சொல்லி இந்தப் பதிவை நான் பதிவிடுகிறேன். நாங்கள் மீண்டும் சந்திப்போம் எனத் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement