• Jun 26 2024

இலங்கையில் கடலுக்கு அடியால் செல்லும் குடி தண்ணீர்..! samugammedia

Chithra / Apr 13th 2023, 1:03 pm
image

Advertisement

கலா ​​ஓயாவின் நீரை சுத்திகரித்து நான்கு கிலோமீற்றர் தூரத்திற்கு கடற்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள குழாய் மூலம் கல்பிட்டிக்கு கொண்டு செல்லும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நீர் வழங்கல் அமைச்சு தெரிவித்துள்ளது.

அப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.


கல்பிட்டி என்பது இலங்கையில் பல மரக்கறிகளை பயிரிடக்கூடிய ஒரு பிரதேசமாகும், அத்துடன் ஏற்கனவே நிலக்கரி, காற்றாலை மற்றும் சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் நாட்டின் தேசிய மின்சார அமைப்பிற்கு 66 சதவீத மின்சாரத்தை வழங்கும் பிரதேசமாகும்.

அத்துடன், இலங்கையின் உப்பு உற்பத்தியில் 50 வீதத்திற்கும் அதிகமான உற்பத்தியானது புத்தளம் பிரதான மாவட்டமான கல்பிட்டியில் உற்பத்தி செய்யப்படுகிறது.


ஆனால் இப்பிரதேச மக்கள் எதிர்நோக்கும் பாரிய பிரச்சினை சுத்தமான குடிநீரின்மையே என நீர் வழங்கல் அமைச்சு கூறுகிறது. இதன் விளைவாக அண்மையில் கல்பிட்டி மஸ்ஜித் கூபா பள்ளிவாசல் மைதானத்தில் ஐம்பது லட்சம் ரூபாவிற்கும் அதிகமான செலவில் நனோ தொழில்நுட்ப மாசு எதிர்ப்பு நீர் சுத்திகரிப்பு நிலையமும் நிறுவப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், கலா ஓயாவில் இருந்து நீரை சுத்திகரித்து கல்பிட்டிக்கு கொண்டு வரும் வேலைத்திட்டத்தை உடனடியாக செய்ய முடியாது எனவும் அதற்கு அதிக முயற்சியும் செலவும் தேவைப்படும் எனவும் அமைச்சு கூறுகிறது. 

ஆனால் அடுத்த சில ஆண்டுகளில் இதை முழுமையாக முடிக்க முடியும் என்று அவர்கள் தெரிவித்தனர்.


இலங்கையில் கடலுக்கு அடியால் செல்லும் குடி தண்ணீர். samugammedia கலா ​​ஓயாவின் நீரை சுத்திகரித்து நான்கு கிலோமீற்றர் தூரத்திற்கு கடற்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள குழாய் மூலம் கல்பிட்டிக்கு கொண்டு செல்லும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நீர் வழங்கல் அமைச்சு தெரிவித்துள்ளது.அப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.கல்பிட்டி என்பது இலங்கையில் பல மரக்கறிகளை பயிரிடக்கூடிய ஒரு பிரதேசமாகும், அத்துடன் ஏற்கனவே நிலக்கரி, காற்றாலை மற்றும் சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் நாட்டின் தேசிய மின்சார அமைப்பிற்கு 66 சதவீத மின்சாரத்தை வழங்கும் பிரதேசமாகும்.அத்துடன், இலங்கையின் உப்பு உற்பத்தியில் 50 வீதத்திற்கும் அதிகமான உற்பத்தியானது புத்தளம் பிரதான மாவட்டமான கல்பிட்டியில் உற்பத்தி செய்யப்படுகிறது.ஆனால் இப்பிரதேச மக்கள் எதிர்நோக்கும் பாரிய பிரச்சினை சுத்தமான குடிநீரின்மையே என நீர் வழங்கல் அமைச்சு கூறுகிறது. இதன் விளைவாக அண்மையில் கல்பிட்டி மஸ்ஜித் கூபா பள்ளிவாசல் மைதானத்தில் ஐம்பது லட்சம் ரூபாவிற்கும் அதிகமான செலவில் நனோ தொழில்நுட்ப மாசு எதிர்ப்பு நீர் சுத்திகரிப்பு நிலையமும் நிறுவப்பட்டுள்ளது.எவ்வாறாயினும், கலா ஓயாவில் இருந்து நீரை சுத்திகரித்து கல்பிட்டிக்கு கொண்டு வரும் வேலைத்திட்டத்தை உடனடியாக செய்ய முடியாது எனவும் அதற்கு அதிக முயற்சியும் செலவும் தேவைப்படும் எனவும் அமைச்சு கூறுகிறது. ஆனால் அடுத்த சில ஆண்டுகளில் இதை முழுமையாக முடிக்க முடியும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement